மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய பாப் டூபிளெஸ்ஸிஸ். வெளியான மகிழ்ச்சி செய்தி – நிர்வாகம் அறிவிப்பு

Faf
Advertisement

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதைப் போன்று உலகெங்கிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவிலும் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதம் டி20 லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தென்னாபிரிக்க நாட்டில் உள்ள நகரங்களை தலைமையாகக் கொண்டு மொத்தம் ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள ஆறு அணிகளையுமே இந்தியாவைச் சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த தென்னாபிரிக்க டி20 லீக் தொடர் பெரிய கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்த அளவும் சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அந்த வகையில் ஜோகனஸ்பர்க் நகரை தலைமையாகக் கொண்ட அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அணிக்கு தற்போது டூப்ளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faf

ஏனெனில் அவர் இந்த அணியின் நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது மேலும் சில வீரர்களை ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி வருகிறது. எனவே நிச்சயம் அனுபவ வீரரான அவரே கேப்டனாக செயல்படுவார் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதோடு இம்ரான் தாஹிர், பிரிட்டோரியஸ், பிராவோ போன்ற சிஎஸ்கே அணியில் விளையாடிய பலவீரர்கள் இந்த அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அணிக்கு ஆலோசகராக தோனியும், பயிற்சியாளராக ஸ்டீபன் பிளம்மிங்கும் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் திடீர் மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து வெளியேறி தற்போது பெங்களூர் அணியில் கேப்டனாக விளையாடி வரும் டூப்ளிசிஸ் மீண்டும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்துள்ளார் என்று சென்னை அணியின் நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement