IND vs ZIM : ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் திடீர் மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Dhawan-IND-Team
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டு தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இதற்கு முன்னதாக ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருந்தது. அந்த தொடருக்கான அட்டவணையும், இந்திய வீரர்களின் பட்டியலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதில் ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் அவரது தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் காயத்தால் சமீபகாலமாகவே இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த கே.எல் ராகுல் தற்போது முழு உடற்தகுதியை நிரூபித்துள்ளதால் அவர் இந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

KL-Rahul

அதோடு இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் கே.எல் ராகுல் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இவர் பெயர் இடம்பெற்று இருந்த வேளையில் நேரடியாக இவர் அணியில் விளையாடுவது எப்படி சாத்தியம் என்று அனைவரும் விமர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஜிம்பாப்வே தொடரில் அவர் விளையாடிய பின்னர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான் என்ன கிழவனா ஆகிட்டேனா – செய்தியாளருக்கு பாபர் அசாம் கொடுத்த காரமான பதில், என்ன கேள்வி கேட்டார்னு பாருங்க

இந்திய அணி இன்னும் ஒரு சில தினங்களில் ஜிம்பாப்வே பயணிக்க இருந்த வேளையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் திடீரென மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜிம்பாப்வே தொடரானது வரும் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement