IPL 2023 : மிஸ் பண்ணாதீங்க.. நானும் ஐ.பி.எல் பைனலுக்கு வரேன் – ரசிகர்களை வியப்பில் ஆழத்திய டூபிளெஸ்ஸிஸ்

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிட்டது.

அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு இரண்டாவதாக தகுதிபெறும் அணிக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மே 28-ஆம் தேதி இதே மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ஆர்.சி.பி அணியை வழிநடத்திய டூபிளெஸ்ஸிஸ் லீக் சுற்றுகளில் முடிவில் 730 ரன்களை குவித்து அசத்தியிருந்தாலும் குஜராத் அணிக்கெதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்து இந்த தொடரிலிருந்து வெளியேறியது.

அதனைத்தொடர்ந்து நாடு திரும்பிய அவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள இரண்டாவது குவாலிபயர் மற்றும் இறுதிப்போட்டிக்கு வர்ணனை செய்யவுள்ளதாக தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : நான் இந்த ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் மற்றும் இறுதிப்போட்டியில் வர்ணனை செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று கூறி ஒரு விடீயோவினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வீடியோ : மேஜிக் சிக்ஸர்களால் மும்பையை பொளந்த சுப்மன் கில் – வாய் மீது கைவைத்து பாராட்டிய ரோஹித் சர்மா

தற்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கும் டூபிளெஸ்ஸிஸ் ரியாலிஸ்டிக் ஹாலோகிராம் என்கிற தொழில்நுட்பத்தின் உதவியுடன் நேரலையில் வர்ணனை செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement