தோனியிடம் கற்ற அந்த வித்தையை பெங்களூரு அணிக்காக பயன்படுத்துவேன் – புதிய ஆர்சிபி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்

DU Plessis MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் முதலாவதாக நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்காண முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

ipl

- Advertisement -

பெங்களூரு புதிய கேப்டன் டு பிளேஸிஸ்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக ஒரு சில அணிகள் தங்களின் புதிய கேப்டன் யார் மற்றும் இந்த சீசனில் தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாட போகும் பிரத்யேகமான புதிய ஜெர்ஸி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் மற்றும் ஜெர்ஸி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பல ஆயிரம் பெங்களூரு ரசிகர்கள் நேரடியாக கலந்து கொண்டார்கள். ரசிகர்களின் முன்னிலையில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூருவை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் அனுபவ வீரர் பப் டு ப்ளேசிஸ் அறிவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அந்த அணியின் புதிய ஜெர்சியை புதிய கேப்டன் பப் டு பிளேஸிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் பல முக்கிய பெங்களூரு அணி நிர்வாகிகள் அடங்கிய குழு வெளியிட்டது.

faf du plessis RCB

தோனியிடம் கற்றுள்ளேன்:
இந்நிலையில் இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த டு ப்ளேஸிஸ் அந்த அணியின் கேப்டன் தோனியிடம் பயின்றதை ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணிக்காக பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை அணியில் முதல் முறையாக எனது பயணத்தை தொடங்கிய போது கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான எண்ணம் எனக்குத் தோன்றியது.

- Advertisement -

அப்போது ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என நான் நினைத்ததற்கு அப்படியே நேர் எதிராக சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி இருந்தார். ஏனெனில் ஒரு தென்ஆப்பிரிக்க கலாச்சாரத்தை சேர்ந்த நான் முதல் முறையாக இந்திய சூழ்நிலையில் நுழையும்போது நான் நினைத்ததற்கு அப்படியே நேர்மாறாக இவர் (தோனி) உள்ளாரே என எனக்கு தோன்றியது”

Faf

“பொதுவாக கேப்டன்ஷிப் செய்வதில் நிறைய ஸ்டைல்கள் உள்ளது. இருப்பினும் எப்போதுமே நாம் நமக்கென்று ஒரு ஸ்டைலில் அணியை வழிநடத்த வேண்டும். அதுதான் கடினமான சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். எனவே நான் விராட் கோலியாக இருக்க விரும்ப மாட்டேன். ஏனெனில் நான் விராட்கோலி கிடையாது. அதேபோல் நான் எம்எஸ் தோனி போல வழிநடத்த மாட்டேன். ஆனால் சென்னையில் நான் விளையாடிய போது நிறைய அம்சங்களை கற்றுக்கொண்டு முதிர்ச்சி அடைந்துள்ளேன். எனவே அந்த பயணத்திற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்” என கூறினார்.

- Advertisement -

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக எம்எஸ் தோனியின் கீழ் விளையாடிய அவர் தோனியிடம் இருந்து நிறைய கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அதைப் பயன்படுத்தி விராட் கோலி அல்லது எம்எஸ் தோனி ஸ்டைலில் கேப்டன்ஷிப் செய்யாமல் தமக்கு உரிய பாணியில் பெங்களூர் அணியை வழிநடத்த இருப்பதாக கூறினார்.

Faf Du Plessis RCB

சென்னை நாயகன் டு பிளேஸிஸ்:
தென்ஆப்பிரிக்காவுக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டன்ஷிப் செய்த டு பிளேஸிஸ் ஒரு அணியை வழிநடத்த தேவையான அனுபவத்தை பெற்றுள்ளார். இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டனாகும் முன்பாகவே கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் அதன்பின் கடந்த 2021 வரை அந்த அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்து பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார்.

இதையும் படிங்க : கேட்ட கேள்வியில ஐ.பி.எல்-யே வேணானும்னு தாய்நாட்டுக்காக விளையாட சென்ற பங்களாதேஷ் வீரர் – என்ன நடந்தது?

அந்த கால கட்டங்களில் சென்னை கேப்டன் எம்எஸ் தோனியை மிக அருகில் இருந்து பார்த்து வந்த அவர் தோனியிடம் இருந்து நிறைய தலைமை பண்புகளை கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பெங்களூர் அணிக்கு கேப்டனாக செயல்படும் அவர் அந்த அனுபவங்களை உபயோகித்து கோப்பையை வெல்வதற்கு முயற்சிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement