கேட்ட கேள்வியில ஐ.பி.எல்-யே வேணானும்னு தாய்நாட்டுக்காக விளையாட சென்ற பங்களாதேஷ் வீரர் – என்ன நடந்தது?

Shakib
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 31, ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் வங்கதேசம் கண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக கருதப்படும் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றது அந்த அணி ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் – சாகிப் அல் ஹசன் சர்ச்சை:
ஆனால் தற்போது தனது மனநிலையும் உடல் நிலையும் மோசமாக இருப்பதன் காரணமாக தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தயாராக இல்லை என வங்கதேச அணி அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்கு பின் அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தான் கூறினார். வங்கதேசம் வெற்றி பெற வேண்டுமானால் அவரைப் போன்ற ஒரு முக்கிய வீரர் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற நிலைமையில் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்பதற்காக சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இருப்பினும் அதன்பின் நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை என்பதால் ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் நாட்டுக்காக அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கையில் அவரின் பெயரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்தது.

- Advertisement -

துளைக்கப்பட்ட கேள்விக்கணைகள்:
அந்த நிலையில் மனநிலை சரியில்லை என அவர் கூறியது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுப்பாக செய்தது. குறிப்பாக இந்நேரம் ஐபிஎல் தொடரில் ஏதோவொரு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் இப்படி மனநிலைமை சரி இல்லை எனக்கூறி விட்டு அதிலிருந்து சாகிப் அல் ஹசன் விலகியிருப்பாரா என்ற நியாயமான கேள்வியை வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹூசைன் நேரடியாகவே எழுப்பியிருந்தார். அவரின் இந்த நியாயமான கேள்வியை தொடர்ந்து வங்கதேசத்தின் பல முன்னணி ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் அவர் மீது தொடர்ச்சியான கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

Shakib Al Hasan Nazmul Hussain

அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் விளையாட மாட்டேன், அந்த தொடரில் மட்டும் தான் விளையாடுவேன் என்பதுபோல் சாகிப் அல் ஹசன் பேசி வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக அறிவித்திருந்தது. மேலும் அவரின் மன நிலைமையை காப்பதற்காக ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கொடுப்பதாக எச்சரிக்கையுடன் கூடிய அனுமதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வழங்கியது.

வேறு வழியின்றி விளையாடும் சாகிப்:
இந்நிலையில் வங்கதேசத்திற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக ஷாகிப் அல் ஹசன் இன்று அறிவித்துள்ளார். முதலில் கேட்டபடி ஓய்வை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கொடுத்த போதிலும் அதற்காக வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதனால் சற்று பயந்த அவர் இன்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹுசைனை தன்னிச்சையாக சந்தித்து தனது முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டு தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடுவதற்கான சம்மதத்தைத் தெரிவித்தார்.

Shakib-3

இது பற்றி அந்த மீட்டிங் முடிந்த பின்னர் நஜ்முல் ஹூசைன் கூறியது பின்வருமாறு. “தென்ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் அனைத்து தொடர்களிலும் பங்கேற்க சாகிப் அல் ஹசன் தயாராகியுள்ளார். அவர் நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணிக்கும் வங்கதேச அணியுடன் இணைய உள்ளார்” என கூறினார். மொத்தத்தில் ஐபிஎல் தொடருக்காக தாய் நாட்டுக்காக விளையாட மறுத்த ஷாகிப் அல் ஹசன் தற்போது பல கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு பின் வேறு வழியின்றி மீண்டும் வங்கதேச அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement