இந்திய கிரிக்கெட்டை பாக்க மசாலா டீ குடிக்கணும் போல.. இதுக்கு தான் அந்த ரூல் வேணும்.. டு பிளேஸிஸ் பாராட்டு

Faf Du Plessis 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4வது லக்னோவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்த உதவியுடன் 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 65-5 என சரிந்தது.

அதன் காரணமாக தோல்வியை சந்திக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அசுட்டோஸ் சர்மா 66* (31) ரன்கள் விளாசி காப்பாற்றினார். அவருடன் விப்ராஜ் நிகாம் 39 (15), ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 34 (22) ரன்கள் எடுத்தனர். அதனால் 19.3 ஓவரில் இலக்கைத் தொட்ட டெல்லி அற்புதமான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இம்பேக்ட் பிளேயர்:

முன்னதாக அந்தப் போட்டியில் இன்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த அசுட்டோஸ் சர்மா கடைசியில் டெல்லியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் அந்த விதிமுறையால் ஒரு ஆல் ரவுண்டர் உருவாவது பாதிக்கப்படுவதாக கடந்த வருடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பல வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் இந்தப் போட்டியில் அந்த விதிமுறையால் தான் டெல்லி வென்றதாக ஃபப் டு பிளேஸிஸ் கூறியுள்ளார்.

இதற்குத்தான் அந்த விதிமுறை இருக்க வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் அசுட்டோஸ், விப்ராஜ் நிகாம் போன்ற திறமையான வீரர்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட்டை பார்க்க நிறைய மசாலா டீ குடிக்க வேண்டும் போல என்றும் கலகலத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது கிரிக்கெட்டின் அற்புதமான ஒரு போட்டி. இம்பேக்ட் பிளேயர் விதிமுறைப் பற்றி நிறைய வீரர்கள் புகார் செய்தனர்”

- Advertisement -

டு பிளேஸிஸ் பாராட்டு:

“ஆனால் இதனால் தான் அந்த விதிமுறை இருக்கிறது. போட்டி முடிந்தது என்று நீங்கள் நினைக்கும் போது ஒருவர் வந்து இப்படி விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்கிறார். அதை நான் இன்னும் அதிகமான மசாலா டீ குடித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பார்ப்பேன். பிட்ச்சில் பந்து பிடித்து வந்ததால் நாங்கள் ஆரம்பத்திலேயே 5 விக்கெட்களை இழந்தோம். அதனால் வெற்றி பெறுவது அசாத்தியம் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: 438 சேசிங் நிடினி மாதிரி மோஹித் இதை செஞ்சாரு.. சிஎஸ்கே, ஆர்சிபியுடன் சேப்டர் முடிவது பற்றி டு பிளேஸிஸ்

“அப்போது எனது பழைய மூளை நீங்கள் முடியும் வரை போட்டியில் எப்போதும் வெளியே இருக்க மாட்டீர்கள் என்று சொன்னது. ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருக்கும் போது என்ன நடக்கும் என்பதை இப்போட்டி காண்பித்துள்ளது. ஒரு வெளிநாட்டு வீரராக இப்படி நிறைய இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடுவதைப் பார்ப்பது பெரிதாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement