சிஎஸ்கே, ஆர்சிபியுடன் என் சேப்டர் முடியுது.. 438 சேசிங் நிடினி மாதிரி மோஹித் இதை செஞ்சாரு.. டு பிளேஸிஸ் உருக்கம்

Faf Du Plessis
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்த உதவியுடன் 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 65-5 என திண்டாடியது.

அதன் பின் நட்சத்திர வீரர்கள் இல்லாததால் கண்டிப்பாக டெல்லி தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இம்பேக்ட் வீரராக உள்ளே வந்த இளம் வீரர் அசுட்டோஸ் ஷர்மா லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி 66* (31) ரன்களை விளாசினார். கூடவே ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 34 (22), விப்ராஜ் நிகாம் 39 (15) ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.

- Advertisement -

458 சேசிங் போல:

அதனால் 19.3 ஓவரில் இலக்கைத் தொட்ட டெல்லி ஐபிஎல் வரலாற்றில் தங்களது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்தது. முன்னதாக அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் மோகித் சர்மாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் ஸ்டம்ப்பிங்கை தவற விட்டார். அதைப் பயன்படுத்திய மோகித் அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார்.

அடுத்த பந்தில் அசுட்டோஸ் சிக்ஸர் அடித்துப் போட்டியை முடித்தார். இந்நிலையில் மோகித் எடுத்த அந்த சிங்கிள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா செய்த 438 ரன்கள் உலக சாதனை சேசிங்கில் மகாயா நிடினி கடைசி ஓவரில் எடுத்த சிங்கிளை நினைவு படுத்தியதாக டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்திய வருடங்களில் சென்னை, பெங்களூரு அணிகளில் விளையாடிய தம்முடைய ஐபிஎல் கேரியர் பெங்களூரு அணியில் முடியலாம் என்றும் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

- Advertisement -

டு பிளேசிஸ் உருக்கம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது உண்மையில் 438 ரன்கள் சேசிங் போட்டியில் கடைசி ஓவரில் மக்காயா நிட்டினி சிங்கிள் எடுத்தத் தருணத்தை எனக்கு கொஞ்சம் நினைவு படுத்தியது. அந்த சிங்கிள் மோஹித் சர்மா தனது தனது வாழ்நாளில் எடுத்த முக்கிய சிங்கிளாக இருக்கும். அது அற்புதமான பார்வர்ட் டிஃபன்ஸ். இந்த பழைய நாயின் வாழ்வில் இன்னும் நிறைய இருக்கிறது (தன்னை சொல்கிறார்)”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் செய்யும் செயல்களால் லக்னோ அணிக்கு தான் ஆபத்து – எச்சரித்த அம்பத்தி ராயுடு

“நீங்கள் ஒரே ஐபிஎல் அணியில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் ஐபிஎல் தொடரின் இயற்கை மற்றும் அதனுடைய ஏலம் மாற்றங்கள் நிறைந்தது. குறிப்பாக ஏலத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும். சென்னை அணியில் இருந்து பெங்களூரு அணிக்கு மாறியது நல்ல சேப்டர். தற்போது டெல்லி அணியில் கடைசி சேப்டர் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement