IPL 2023 : என் சின்ன மகள காப்பாத்துன சிஎஸ்கே எனக்கு எப்போவும் பெருசு தான் – பழைய பாசத்தை மறக்காத டு பிளேஸிஸ்

Faf
- Advertisement -

பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தன்னுடைய கடைசி போட்டியில் குஜராத்திடம் தோல்வியை சந்தித்து வரலாற்றில் 16வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து 636 ரன்கள் குவித்தும் கேப்டன் டு பிளேஸிஸ் 730 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றும் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

அப்படி தோல்வியை சந்தித்தாலும் பிளே ஆப் சுற்றில் தமக்கு மிகவும் பிடித்த முன்னாள் அணியான சென்னை வெற்றி பெற ஆதரவு கொடுக்க உள்ளதாக பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் வெளிப்படையாகவே தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர் கடந்த 2011இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை சர்வதேச கிரிக்கெட்டில் அதே வருடம் அறிமுகமாகி முக்கிய வீரராகவும் நாளடைவில் கேப்டனாகவும் செயல்பட்டு அசத்தியதை அந்நாட்டு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

- Advertisement -

சிஎஸ்கே குடும்பம்:
அதை விட 2012இல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்று நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2018 சீசனில் முக்கியமான குவாலிபயர் 1 போட்டியில் இதர வீரர்கள் தடுமாறிய போது 67 ரன்கள் குவித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்று 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதை மறக்காத சென்னை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே போல 2020இல் 449 ரன்கள் எடுத்து 2021இல் 633 ரன்கள் விளாசி 4வது கோப்பையை முக்கிய பங்காற்றிய அவரை துரதிஷ்டவசமாக மெகா ஏலத்தில் சென்னை தக்க வைக்கத் தவறியது.

ஒருவேளை இந்த சீசனில் அடித்த 730 ரன்களை சென்னைக்காக அவர் எடுத்திருந்தால் இந்நேரம் பிளே ஆப் சுற்றில் இருந்திருப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் தம்முடைய 2வது மகள் முதல் முறையாக சென்னை அணியில் தான் காலடி வைத்து நடக்க பழகியதாக தெரிவுக்கும் டு பிளேஸிஸ் அந்த குழந்தைக்கு ஒரு முறை உடம்பு சரியில்லாமல் தவித்த போது சென்னை அணி மருத்துவர்கள் தான் காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை என்பது ஒரு ஐபிஎல் அணி என்பதை தாண்டி எப்போதும் தம் மீதும் தமது குடும்பத்தின் மீதும் அக்கறையை காட்டும் அணி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது சுயசரிதையில் பழைய பாசத்தை மறக்காமல் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “2021 சீசனில் சென்னை அணிக்காக விளையாடியது எனது கேரியரில் பெரிய ஹைலைட்டாகும். என்னை பொறுத்த வரை சிஎஸ்கே என்பது வெறும் கிரிக்கெட் அணி அல்ல. என்னுடைய இளைய மகள் எமிலி இந்த உலகில் தன்னுடைய முதல் அடியை சென்னை அணியின் ஹோட்டலில் தான் எடுத்து வைத்தார்”

“அப்போது அதை மொத்த சென்னை அணியினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அடுத்த வருடம் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட இங்கே வந்த போது அதே சென்னை அணியின் ஹோட்டலில் தங்கியிருந்த போது காய்ச்சல் வந்து விட்டது. அந்த நாட்களில் நான் எனது குழந்தையுடன் இருந்தேன். அப்போது சென்னை அணியின் மருத்துவ குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டு எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர்”

இதையும் படிங்க:IPL 2023 : ஆர்சிபி’யை குத்தி காட்டினாரா? சிஎஸ்கே வெற்றியை வேற லெவலில் பாராட்டிய கௌதம் கம்பீர் – ரசிகர்கள் வியப்பு

“அந்த சமயத்தில் ஒரு சில போட்டிகளில் நான் தாமதமாக கலந்து கொண்டும் சென்னை நிர்வாகம் என்னை எதுவும் சொல்லவில்லை. மாறாக என்னுடைய குழந்தை மற்றும் மனைவி நன்றாக இருக்கிறார்களா என்று அவர்கள் கேட்டனர். அது தான் சிஎஸ்கே. அந்த அணியில் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார். அந்தப் பகுதியை தற்போது சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவரை போய் தவற விட்டு விட்டோம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement