தோனியை பாத்து இதை செய்ங்கன்னு.. அவங்ககிட்ட சொன்னதே சூப்பர் ஓவரில் ஜெய்க்க காரணம்.. டு பிளேஸிஸ்

Faf Du Plessis
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2025/26 எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் 9வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் டர்பன் அணியை ஜேஎஸ்கே சூப்பர் ஓவரில் தோற்கடித்து அசத்தியது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய ஜேஎஸ்கே 20 ஓவரில் 205/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்தியூ டீ வில்லியர்ஸ் 38, கேப்டன் டு பிளேஸிஸ் 47, சுபம் ரன்ஜனே 50*, டொனேவன் பெரிரா 33* ரன்களை குவித்தனர். டர்பனுக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய டர்பனும் 20 ஓவரில் 205/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.

- Advertisement -

ஜேஎஸ்கே வெற்றி:

அதிகபட்சமாக எவன் ஜோன்ஸ் 43 (17), ஹென்றிச் க்ளாஸென் 29 (19), கேப்டன் மார்க்ரம் 37 (30) ரன்கள் எடுத்தனர். ஜேஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் க்லீசன் 3, ஆக்கில் ஹுசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக ரிச்சர்ட் க்ளீசன் வீசிய சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய டர்பன் 5/1 எடுத்தது. அடுத்ததாக நூர் அஹ்மத் வீசிய சூப்பர் ஓவரில் 4, 0, 4 என 2 பவுண்டரிகளை ரிலீ ரோசவ் பறக்க விட்டதால் ஜேஎஸ்கே வென்றது.

முன்னதாக அப்போபோட்டியில் டர்பன் வெற்றிக்கு கடைசி பந்தில் ஒரு 1 தேவைப்பட்ட போது ஜேஎஸ்கே விக்கெட் கீப்பர் பெரிரா தன்னுடைய கழற்றி விட்டு கீப்பிங் செய்தார். எதிர்பார்த்ததைப் போலவே அந்த பந்தை பேட்ஸ்மேன் சைமன் ஹார்மர் அடிக்கத் தவறினார். அப்போது பந்தை பிடித்த பெரிரா ஸ்டம்ப்பை நோக்கி சரியாக எரிந்து ரன் அவுட் செய்ததால் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில் 2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் தோனி கையுறையை கழற்றி விட்டு ரன் அவுட் செய்தது இந்தியாவின் முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

தோனி போல:

அதே போல நீங்களும் செய்யுங்கள் என்று தங்களது விக்கெட் கீப்பர் மற்றும் பவுலரிடம் சொன்னதாக ஜேஎஸ்கே கேப்டன் டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார். கடைசியில் அது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீண்ட காலத்திற்கு முன்பாக எம்எஸ் தோனி இந்தியாவுக்காக ஸ்டம்புக்கு பின்னே நின்ற ஒரு போட்டி எனக்கு நினைவுக்கு வந்தது”

இதையும் படிங்க: ரிஷப் பண்டுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது.. இந்த 2 பேருக்கு இடையே தான் போட்டியே – விவரம் இதோ

“அது வங்கதேசத்துக்கு எதிராக உலகக் கோப்பையில் நடந்தது என்று நினைக்கிறேன். அன்று ஒருவர் பேட்ஸ்மேனுக்கு எதிராக கட் பந்தை அவரைச் சுற்றி வீசினார். அந்த நினைவு எனது தலைக்குள் இருந்தது. அதே போல பந்து வீசுமாறு எங்கள் அணி பவுலர் வியான் முல்தாரிடம் சொன்னேன். அப்படி செய்தால் விக்கெட் கிடைக்கும் என்று நாங்கள் நம்பியது நடந்தது” எனக் கூறினார்.

Advertisement