தெ.ஆ மண்ணில் இந்தியா தடுமாற இது தான் காரணம்.. அதை மட்டும் செஞ்சா ஜெயிச்சுடலாம்.. டு பிளேஸிஸ் கருத்து

Faf Du Plessis
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் பாக்ஸிங் டேவில் துவங்கும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் விளையாடிய 8 தொடர்களில் 7 தோல்விகளை சந்தித்த இந்தியா கடைசியாக 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் 1 – 1 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. எனவே அந்தளவுக்கு சவால் மிகுந்த தென்னாப்பிரிக்காவில் இம்முறையாவது இந்தியா டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

தடுமாற்றத்தின் காரணம்:
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பிறந்து வளர்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் இருக்கும் அதிகப்படியான பவுன்ஸை சமாளிப்பதற்கு தடுமாறுவதே வெற்றிக்கு தடையாக இருப்பதாக முன்னாள் கேப்டன் ஃபப் டு பிளேஸிஸ் கூறியுள்ளார். எனவே அதை சமாளித்து போர்டில் அதிக ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெறுவது எளிது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸில் பேசியது பின்வருமாறு.

“பவுன்ஸ். இந்தியாவில் நீங்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் பந்துகளை விட இங்கே கிட்டத்தட்ட ஒரு முழு கையில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வீசுவது போன்ற சூழ்நிலை இருக்கும். பொதுவாக இந்தியாவில் அவர்கள் பந்துக்கு மேலே சென்று அடிப்பார்கள். ஆனால் இங்கே பவுன்ஸ் இருப்பதால் அதில் தாமதமான நகர்வு இருக்கும். எனவே தென்னாபிரிக்காவில் நீங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு பந்தை அடிக்காமல் விட்டு நீண்ட நேரம் களத்தில் இருக்க வேண்டும்”

- Advertisement -

“2018 சுற்றுப் பயணத்தில் இந்தியா எங்களை சேசிங் செய்து வெற்றியை நெருங்கியது இன்னும் நினைவிருக்கிறது. அந்த தொடரில் அவர்கள் பந்தை நன்றாக விட்டார்கள். அது தான் தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமான டெஸ்ட் அணியாக செயல்படுவதற்கான சாவியாகும். நீங்கள் அங்கே பொறுமையாக இருந்து அனைத்து நேரங்களிலும் சூழ்நிலைகளை மதிக்க வேண்டும்”

இதையும் படிங்க: நாங்க அதை ஒத்துக்கிறோம்.. இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்பாக தெ,ஆ கேப்டன் தெம்பா பவுமா பேட்டி

“அதே சமயம் எக்ஸ்ட்ரா பவுன்ஸாகி வரும் ஷார்ட் பந்துகளில் எதை அடிக்கலாம் எதை விடலாம் என்ற நல்ல திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இங்கே ரன்கள் தங்கமாகும். நீங்கள் போர்டில் ரன்கள் வைத்திருக்கும் போது வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பை பெறுவீர்கள். எனவே தற்போது தென்னாபிரிக்காவை விட அதிக அனுபவத்தைக் கொண்டுள்ள இந்தியா இத்தொடரில் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். அதனால் தேவையான ரன்களை எடுத்து விட்டால் அவர்களின் பவுலர்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement