இந்திய அணியில் விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து யாருமே ஃபிட்டா இல்ல – ரோஹித்தை மறைமுகமாக தாக்கிய முன்னாள் பாக் வீரர்

Virat Kohli Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 29வது சதமடித்து 121 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச், ஜோமேல் வேரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ப்ரத்வெய்ட் 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 3வது நாள் முடிவில் 229/5 ரன்கள் எடுத்து இன்னும் 209 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Virat-Kohli

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி உலகிலேயே தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் அரை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் 500 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீரர் ஆகிய வரலாற்றையும் படைத்தார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகளுக்கு சவாலாக நின்று 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

ஃபிட்டா இல்ல:
இப்படி வெற்றிகரமாக செயல்படுவதற்கு பேட்டிங், டெக்னிக் திறமை என்பதெல்லாம் தாண்டி தம்முடைய ஃபிட்னஸ் தான் முக்கிய காரணமென்று விராட் கோலி சதமடித்த பின் தெரிவித்திருந்தார். குறிப்பாக பவுண்டரிகள் அடிப்பதற்கு காத்திருக்காமல் தம்முடைய பலமான சிங்கிள், டபுள் எடுப்பதற்கு ஃபிட்னஸ் தான் உதவுவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய அணியில் மட்டுமல்லாமல் உலகிற்கே ஃபிட்டாக இருப்பதற்கு விராட் கோலி எடுத்துக்காட்டாக திகழ்வதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பாராட்டியுள்ளார்.

Butt-1

ஆனால் அவருடன் ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உட்பட இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ஃபிட்டாக இல்லை என்று தெரிவிக்கும் சல்மான் பட் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஃபிட்டாக மட்டுமில்லை. முழுவதுமாக ஃபிட்டாக இருக்கிறார். குறிப்பாக உலகில் ஃபிட்டாக இருக்கும் டாப் 3 வீரர்களை நீங்கள் பெயரிட்டால் அதில் அவர் நிச்சயமாக இருப்பார். சொல்ல போனால் ஃபிட்னஸ் என்று நீங்கள் பார்த்தால் அவர் தான் முதலாவதாக வருவார்”

- Advertisement -

“பொதுவாக ஃபிட்டாக இருப்பதற்கு அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை அவரவர்களை பொறுத்தது. அதை செய்யுமாறு நீங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது. அந்த வகையில் விராட் கோலி உடல் தகுதியுடன் இருப்பதில் தமக்கு தாமே அர்ப்பணிப்புடன் இருக்கிறார். குறிப்பாக அவர் எந்த பயிற்சியாளரும் சொல்லி அதை செய்வதில்லை. மேலும் தற்போதைய இந்திய அணியில் விராட் கோலி அளவுக்கு யாரும் ஃபிட்டாக இல்லை. சில வீரர்கள் உடல் தகுதியுடன் இல்லை. ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ஆகியோர் ஃபிட்டாக இருக்கிறார்கள்”

Rohit Sharma 2

“ஆனால் பெரும்பாலான வீரர்கள் அந்தளவுக்கு பொருத்தமாக இல்லை. இது உங்களை நிர்வகிப்பது பற்றியது. அதே போலவே பாபர் அசாம் ஃபிட்னெஸ் கடைபிடிப்பதற்காக சிறப்பு பயிற்சி எடுப்பதையும் நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார். முன்னதாக 2022 ஜனவரியில் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா முழுமையான ஃபிட்னஸ் கடைபிடிக்காததால் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்தார்.

இதையும் படிங்க:இந்தியாவுடன் சேந்துகிட்டு ரொம்ப ஆடாதீங்க, ஐசிசி’யை வெளிப்படையாக விமர்சித்த சோயப் அக்தர் – நடந்தது என்ன?

அதன் காரணமாக கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதனால் அணியில் இருக்கும் இதர வீரர்களுக்கு கேப்டனாக இருப்பவர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று விமர்சித்த கபில் தேவ் முழுமையான ஃபிட்னஸ் இல்லாத காரணத்தாலேயே நீங்கள் பேட்டிங்கிலும் தடுமாறுவதாக ரோஹித் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement