மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் ஆஸ்பிட்டலுக்கு கொண்டுசெல்லப்பட்ட வீரர் – மே.இ வீரருக்கு ஏற்பட்ட சோகம்

Lewis-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச தீர்மானிக்க துவக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் விளையாட துவங்கினர். களமிறங்கியதிலிருந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக நாலாபுறமும் பந்துவீச்சாளர்களை சிதறடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது.

ஒரு கட்டத்தில் பந்துகளை விரட்டியடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். அப்போது ராகுல் அடித்த பந்து பவுண்டரி லைனுக்கு செல்ல அங்கு பவுண்டரி லைனில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் அதனை தடுக்க சென்றார். அப்போது பந்தை தடுக்கும் போது கால் முட்டி தரையில் இடித்து விழுந்து அந்த பந்தை எடுத்து கீப்பரை நோக்கி வீசினார்.

Lewis

அதன் பின்னர் தனது கால் பகுதியில் (முட்டியில்) பலமான அடிபட்டதை உணர்ந்த லீவிஸ் மைதானத்தில் அப்படியே படுத்தார். பின்னர் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் மருத்துவர்கள் முதலுதவி செய்ய அவரின் காயம் பலமாக இருந்ததால் அவரை ஸ்டெச்சரில் தூக்கிச் சென்றனர். மேலும் அவரது காலில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதற்காக உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement