சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்கள் 2 பேரே காரணம் – இயான் மோர்கன் மகிழ்ச்சி

Morgan-1
- Advertisement -

மூன்றாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஆணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் குவித்தது.

rana

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரரான ராணா 80 ரன்களும், திரிப்பாதி 53 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து சஹா மற்றும் வார்னர் ஆகியோரது விக்கெட்டை இழந்தது பின்னர் மணிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தாலும் இறுதி நேரத்தில் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இன்றைய போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் குறிப்பாக டாப் ஆர்டரில் விளையாடிய நித்திஷ் ராணா மற்றும் திரிப்பாதி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு ஒரு அருமையான தொடக்கத்தை கொடுத்தனர்.

rana 1

அவர்கள் அமைத்த அந்த சிறப்பான துவக்கம் தான் மிடில் ஓவர்களில் நாங்கள் இயல்பாக விளையாட உதவியது. பந்து வீச்சிலும் நாங்கள் சிறப்பாக துவங்கிய செயல்பட்டோம். பவர் பிளே முழுவதுமே எங்களுக்கு பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஹர்பஜன் சிங் முதல்வரை சிறப்பாக வீசினார் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுமே அருமையாக பந்து வீசினார்கள்.

முதல் போட்டியை வெற்றியோடு துவங்கிய உள்ளது இந்த தொடரை அணுக ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நாங்கள் அடித்த ரன்களை பற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அதே வகையில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது முழு திருப்தியாக உள்ளது என மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement