எங்க டீம்ல இருக்குற இந்த பிரச்சனை தான் தொடர் தோல்விகளுக்கு காரணம் – இயான் மோர்கன் வருத்தம்

Morgan-1

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே குவித்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்த கொல்கத்தா அணியால் பெரிய ரன் குவிப்பை எடுக்கமுடியாமல் போனதே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

morgan

கொல்கத்தா அணி சார்பாக திரிபாதி 36 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 24 ரன்களை குவித்தார். அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இதனை தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும், மில்லர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் கிடைத்த தோல்வியானது முழுமையாக பேட்ஸ்மேன்கள் செய்த தவறினால் நடந்தது. போட்டியின் துவக்கத்திலிருந்தே முழு இன்னிங்சுகளிலும் நாங்கள் சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

முதல் ஓவரிலிருந்து 20 ஆவது ஓவர் வரை எங்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எங்களது பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு கொண்டு செல்லவில்லை. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினர். இந்த போட்டியில் 40 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்றும் வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாகவே இருந்தது.

- Advertisement -

rana

மேலும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்கும்போது அதன் பின்னர் அதனை சரி செய்வது கடினமாக உள்ளது. இந்த தொடர் முழுவதும் விக்கெட்டுகளை இழப்பது, சரியான நேரத்தில் மற்றும் தேவையான நேரத்தில் ரன்களை குவிக்க தவறுவது என பேட்ஸ்மேன்கள் செய்யும் சில தவறுகளால் தோல்விகளை சந்தித்து வருகிறோம் என மோர்கன் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.