எவ்ளோ முயற்சித்தும் அவரை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தோல்விக்கு காரணம் இதுதான் – மோர்கன் வருத்தம்

Morgan-1

ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி ரசல் மற்றும் கில் ஆகியோரது சுமாரான ஆட்டத்தினால் 154 ரன்கள் மட்டுமே குவித்தது.

russell

அதன் பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் தாவனின் அதிரடியான ஆட்டம் காரணமாக முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ரிஷப் பண்ட் 16 ரன்களில் ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டாய்நிஸ் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா 41 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் என 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மோர்கன் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் தோற்றது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த பேட்டியில் நாங்கள் பேட்டிங்கில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டோம். மிடில் அவர்களில் அதிக அளவு விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து விட்டோம் .

Kkr

ரசல் மட்டும் இல்லையென்றால் 150 ரன்கள் கூட எங்கள் அணிக்கு வந்திருக்காது. டெல்லி அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். பிரித்வி ஷா அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த மைதானம் பேட்டிங்கில் எவ்வளவு ஒத்துழைக்கிறது என்பதை இவரது பேட்டிங்கிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

shaw

நாங்கள் எந்த துறையிலும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கம்மின்ஸ் மட்டும் சிறப்பாக பந்து வீசினார். இன்றைய போட்டியில் எங்களது திட்டம் சரியாக ஈடுபடவில்லை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும் எங்களால் ஒன்றுபட்டு சிறப்பாக விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவோம் என மோர்கன் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.