- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாதியில் அந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு இந்தியா டி20 உ.கோ வெல்வாங்க.. இயன் மோர்கன் கணிப்பு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சொல்லப்போனால் 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை முதலும் கடைசியுமாக தோனி தலைமையில் இந்தியா வென்றது. அதன் பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த எத்தனையோ தரமான வீரர்களுடன் களமிறங்கியும் 16 வருடங்களாக இந்தியா 2வது கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. அந்த வரிசையில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்திடம் செமி ஃபைனலில் தோற்றது.

- Advertisement -

மோர்கன் கணிப்பு:
அதனால் இம்முறையும் கோப்பையை வெல்வோமா என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களிடமே காணப்படுகிறது. இந்நிலையில் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினாலும் அதை சமாளித்து கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்தியாவிடம் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“காயங்கள் இருந்தாலும் கூட தொடர் முழுவதும் சிறப்பாக செயல்படக்கூடிய வலுவான அணியாக இந்தியா உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் வலிமை மற்றும் திறமையின் ஆழம் ஆகியவை இந்த நேரத்தில் நம்ப முடியாததாக இருக்கிறது. அவர்கள் வைத்திருக்கும் தரத்தின் காரணமாக 15 பேர் கொண்ட அணியில் சில வீரர்கள் காயத்தால் சந்தித்தாலும் பாதிப்பு ஏற்படாது என்பதைப் பற்றி பேசுகிறோம்”

- Advertisement -

“2007இல் நடந்த முதல் உலகக் கோப்பைக்கு பின் அவர்கள் அதை வெல்லவில்லை. எனவே என்னைப் பொறுத்த வரை இம்முறை அவர்கள் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக உள்ளனர். ஏனெனில் பேப்பரில் அவர்களிடம் போதுமான தரம் இருக்கிறது. அதற்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்திய அணியால் இந்த தொடரில் எந்த அணியையும் வீழ்த்த முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ப்ளீஸ் நிறுத்துங்க.. அம்பாத்தி ராயுடுவை அப்படி சொல்லல.. ஆர்சிபி ரசிகர்களிடம் பீட்டர்சன் கோரிக்கை

அதே நிகழ்ச்சியில் மைக்கேல் ஆத்தர்டன் பேசியது பின்வருமாறு. “2007க்குப்பின் அவர்கள் உலகக் கோப்பையை வெல்லவில்லை. அது தான் பெரிய கேலிக்கூத்து. எல்லோரும் ஐபிஎல் தொடரால் இந்தியா முன்னேறியுள்ளதாக பேசுகின்றனர். ஆனால் இவ்வளவு காலகமாக அவர்கள் கோப்பையை வெல்லாமல் இருப்பது ஒரு முரண்பாடான விஷயம். அவர்கள் ஐபிஎல் தொடருக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரே ஒரு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார்கள் என்பது வேடிக்கையானது” என்று கூறினார்.

- Advertisement -