கரீபியன் தீவில் கடந்தாண்டு ருத்ரதாண்டவம் ஆடிய இர்மா மற்றும் மரியா புயலால் பயங்கர சேதம் ஏற்பட்டது.அந்த சேதங்களை சரிசெய்வதற்கான நிதியை திரட்ட மேற்கிந்திய தீவுகள் அணி ஐசிசி-யின் உதவியை நாடியது.ஐசிசி-யும் கரீபியன் தீவுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்வதற்காக நிதி திரட்ட வரும் மே மாதத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்த முடிவெடுத்துள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் மே மாதம் 31ம் தேதி நடைபெறும் என்று ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி லெவன் அணியின் கேப்டனாக இயன் மோர்கன் செயல்படுவார் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
An ICC World XI captained by @Eoin16 will play @westindies at @HomeOfCricket in May, raising funds for stadia damaged in Hurricanes Irma and Maria
FULL DETAILS HERE ⬇️https://t.co/FTIKGfehAJ pic.twitter.com/2dMTXBJvyK
— ICC (@ICC) March 22, 2018
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மோர்கன் “மே மாதம் நடைபெறவுள்ள போட்டியை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். நல்ல காரியங்களுக்கு கிரிக்கெட் உலகம் எப்போதும் துணை நிற்கும். உலகின் சிறந்த வீரர்கள் பங்கேற்கும் அணிக்கு தலைமை தாங்குவது பெருமையாக உள்ளது என்றார்.