- Advertisement -
ஐ.பி.எல்

தோனி, ரோஹித்தை தொடர்ந்து இயான் மோர்கனை தண்டித்த ஐ.பி.எல் நிர்வாகம் – விவரம் இதோ

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 13வது லீக் மேட்சில், தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. ரன் மழையாகப் பொழிந்த இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் பந்து வீசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் தாமதமாக பந்து வீசுவதால் அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப் படுவது இது 3-வது முறையாகும்.

- Advertisement -

இதற்கு முன்னர் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தாமதமாக பந்து வீசிய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் சென்னை அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன். தன்னுடைய அணி பௌலர்களுக்கு அறிவுரை வழங்குவது, மேலும் எந்த பௌலரை எங்கே பயன்படுத்துவது என்பதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார் இயான் மோர்கன். இதுவே இப்போட்டியில் கொல்கத்தா அணி தாமதமாக பந்து வீசியதற்கு காரணமாக அமைந்தது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி பௌலிங் செய்யும் அணியானது ஒரு மணி நேரத்திற்குள் 14.1 ஓவரை வீசி இருக்கவேண்டும். 90 நிமிடங்களில் 20 ஓவர்களை முடித்திருக்க வேண்டும். இதில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விடப்படும் இரண்டு இடைவெளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

- Advertisement -
Published by