போதுங்க. நான் விளையாடுன வரைக்கும் போதும். ஓய்வை அறிவித்த – இங்கிலாந்து அணியின் கேப்டன்

Eng
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக ஓய்வினை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் தங்களது ஓய்வினை அறிவித்திருந்த வேளையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கனும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அயர்லாந்து நாட்டில் பிறந்த அவர் அந்த அணிக்காக 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

பின்னர் இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது ஆசைக்காக அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து இங்கிலாந்து அணியின் வீரராக 2009-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

- Advertisement -

கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்த இங்கிலாந்து கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக கோப்பையை ஒரு முறை கூட வெல்லாமல் இருந்த வேளையில் இயான் மோர்கனின் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

அதோடு மட்டுமின்றி டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இங்கிலாந்து அணியின் மிகச் சிறப்பான கேப்டனாக பார்க்கப்படும் அவர் கடந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தாலும் ஓய்வுக்கு பிறகு உலகெங்கிலும் நடைபெற்று வந்த டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 36 வயதான அவர் இனி எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாடப் போவதில்லை என்றும் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இதையும் படிங்க : அவர் வந்தப்பவே எங்களின் தோல்வி கன்ஃபார்ம் ஆகிடுச்சு, அவர் தான் அதிக விக்கெட் எடுக்கப்போறாரு – ரிக்கி பாண்டிங் ஓப்பன்டாக்

நான் நேசிக்கும் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுவே சரியான நேரம். இருந்தாலும் வர்ணனையாளராகவோ அல்லது பயிற்சியாளராகவோ கிரிக்கெட் விளையாட்டுடன் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement