எங்களை தவறான முடிவு எடுக்க வைத்துவிட்டார்..! நாங்கள் தோற்றதற்கு இவர்தான் காரணம்..! – யார் தெரியுமா..?

- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் குல்தீப் யாதவின் மாயாஜால சுழல் பந்து வீசிசால் இங்கிலாந்து அணி திணறியது.மேலும், இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதற்காக குல்தீப் யாதவிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கபட்டது.
rahul
நேற்று (ஜூலை 3) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க 5 ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ் கைப்பற்றினர்.அதிலும் இந்த போட்டியின் 14 வது ஒவரில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணி வீரர்களை திணறடித்தார்.

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டிக்கு பின் பேசிய இயான் மோர்கன் “இந்த போட்டியில் எங்கள் அணியில் நடுவில் உள்ள 3 விக்கெட்டுகளை இழந்ததும் எங்களால் அதிலிருந்து மீள முடியவில்லை.
morgan
குலதீப் யாதவ் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றிவிட்டார். ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடும் ஜோஸ் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் கூட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால் எங்களை தவறான முடிவுகளை எடுக்குமாறுச் செய்தார் குல்தீப் யாதவ். அவர் இந்த தொடரில் எங்களுக்கு கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலாக இருப்பார். ” என்று குல்தீப் யாதவின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டியுளளார்.

- Advertisement -
Advertisement