இந்திய அணிக்கு எதிராக எங்களது இந்த மோசமான நிலைக்கு இதுவே காரணம் புலம்பும் – தெ.ஆ பயிற்சியாளர்

Nkwe

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Maharaj

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் நிக்வி கூறியதாவது : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் ஆதிக்கம் செலுத்த தவறியதற்காக பல காரணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சோபிக்க தவறிய உள்ளனர்.

ரபாடா மற்றும் பிளாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், மகாராஜ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் என உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் இந்திய அணிக்கு சிறிதுகூட நெருக்கடியை அவர்களால் கொடுக்க முடியவில்லை. மேலும் அதே சமயத்தில் இந்திய அணியில் இரு தரப்பும் அதாவது வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டும் எங்கள் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.

rabada

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களது பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்துகிறார்கள் இதுவே எங்கள் அணியின் பின்னடைவிற்கு காரணம். இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு தற்போது இந்த நிலைக்கு எங்களை கொண்டுவந்துள்ளது இதிலிருந்து மீண்டு வருவோம் என்று பயிற்சியாளர் நிக்வி கூறியது குறிப்பிடத்தக்கது.