- Advertisement -
உலக கிரிக்கெட்

72க்கு அவுட்.. 342 ரன்ஸ்.. இந்தியாவை முந்தி ஓடவிட்ட இங்கிலாந்து மெகா உலக சாதனை.. தெ.ஆ 2 மோசமான சாதனை

தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டியில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. அத்துடன் 1998க்குப்பின் 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது.

அந்த சூழ்நிலையில் சம்பிரதாயக் கடைசி செப்டம்பர் 7ஆம் தேதி இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கடந்த 2 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பதிலடியாக தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கி 50 ஓவரில் 414/5 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து உலக சாதனை:

அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூர் சதத்தை அடித்து 100, ஜேக்கப் பெத்தல் 118 ரன்கள் அடித்தார்கள். அவர்களுடன் ஜேமி ஸ்மித் 62 (48), ஜோஸ் பட்லர் 62* (32) ரன்கள் அடித்து அசத்தினார்கள். தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், கோர்பின் போஸ்க் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா ஆரம்ப முதலே இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் படுமோசமாக விளையாடி 20.5 ஓவரில் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்க்ரம் 0, ரிக்கல்டன் 1, முல்தர் 0, பிரீட்ஸ்க் 4, ஸ்டப்ஸ் 10, தேவால்டு பிரேவிஸ் 6 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 20 மகாராஜ் 17 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா மோசம்:

இங்கிலாந்துக்கு ஆர்ச்சர் 4, பிரைடன் கார்ஸ் 2, அடில் ரசித் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 342 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து ஒய்ட்வாஷ் தோல்வியைத் தவிர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியைப் (342 ரன்கள்) பதிவு செய்து இங்கிலாந்து உலக சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததே முந்தைய உலக சாதனை.

இதையும் படிங்க: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய – இங்கிலாந்து அணி

மறுபுறம் தென்னாபிரிக்கா தங்களுடைய 2வது குறைந்தபட்ச ஸ்கோரை (72) பதிவு செய்து மோசமான சாதனைப் படைத்தது. இதற்கு முன் இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிராக தலா 83 ரன்களுக்கு அவுட்டானதே முந்தைய சாதனை. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2025 ஆகஸ்ட் மாதம் மெக்காய் நகரில் ஆஸ்திரேலியாவிடம் 276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்றத்தை முந்தைய படுதோல்வியாகும்.

- Advertisement -