இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்திய அணியின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணி :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று செப்டம்பர் 7-ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சிதறடித்து மிகச் சிறப்பாக ரன் சேர்த்தது. இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியானது 414 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தல் 110 ரன்களையும், ஜோ ரூட் 100 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதுமட்டுமின்றி துவக்க வீரர் ஜேமி ஸ்மித் 62 ரன்களையும், ஜாஸ் பட்லர் 62 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்கள். அதனை தொடர்ந்து தற்போது 415 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து அணி செய்த சாதனை யாதெனில் : இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 400 ரன்களுக்கு மேல் அடித்த அணியாக தென்னாபிரிக்க அணி (8 முறை) முதலிடத்திலும், இந்திய அணி (7 முறை)இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் அடித்த 414 ரன்களையும் சேர்த்து இங்கிலாந்து அணியும் ஏழுமுறை 400 ரன்கள் கடந்து இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
இதையும் படிங்க : இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனடா அணி மோசமான சாதனை
அதுமட்டுமின்றி கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் 400 ரன்களுக்கு மேல் ஏழு முறை அடித்து கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை 400+ ரன்கள் அடித்த அணியாகவும் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



