ENG vs NZ : டெஸ்ட் சாம்பியனுக்கே இந்த கதின்னா, நம்ம நிலைமை – இங்கிலாந்து உலகசாதனை வெற்றி

England Test Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஜூன் 2இல் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து ஏற்கனவே 2 – 0* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தது. அந்த நிலைமையில் ஜூன் 23இல் லீட்ஸ் நகரில் துவங்கிய இந்த தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

- Advertisement -

அந்த அணிக்கு டாம் லாதம், கேப்டன் கேன் வில்லியம்சன் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் முதல் 2 போட்டிகளில் அபாரமாக பேட்டிங் செய்து காப்பாற்றிய டார்ல் மிட்சேல் இப்போட்டியில் மீண்டும் சதமடித்து 109 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக டாம் ப்ளண்டல் 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு லீஸ் 4, கிராவ்லி 6, ஓலி போப் 5, ஜோ ரூட் 5, பென் ஸ்டோக்ஸ் 18 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இங்கிலாந்து மாஸ்:
அதனால் 55/5 என திணறிய இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ – ஜாமி ஓவெர்ட்டன் ஜோடி அட்டகாசமாக பேட்டிங் தங்களது அணியை மீட்டெடுத்தனர். அதில் 97 ரன்களில் அவுட்டான ஓவெர்ட்டன் தனது முதல் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் மறுபுறம் மிரட்டிய ஜானி பேர்ஸ்டோ 24 பவுண்டரிகளுடன் சதமடித்து 162 (157) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கூடவே ஸ்டுவர்ட் ப்ராட் 42 (36) ரன்கள் எடுத்ததால் தப்பிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி 3 விக்கெட்டும் எடுத்தனர்.

Darll Mitchell ENG vs NZ Tom Blundell Motty Potts

அதனால் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 326 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டாம் லாதம் 76 ரன்கள், டாம் ப்ளன்டல் 88*, டார்ல் மிட்சேல் 56 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் மீண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 296 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு அலெஸ் லீஸ் 9, ஜாக் கிராவ்லி 25 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3-வது இடத்தில் களமிறங்கிய ஓலி போப் 82 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன் தோல்வி:
கடைசியில் வெறித்தனமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் 86* ரன்கள் எடுக்க அவருடன் 8 பவுண்டரி 3 சிக்சருடன் டி20 இன்னிங்சை ஆடிய ஜானி பேர்ஸ்டோ 71* (44) ரன்கள் எடுத்து சிக்ஸர் அடித்து மெகா பினிஷிங் கொடுத்தார். அதனால் 296/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை மண்ணை கவ்வ வைத்து 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது. இந்த தொடரின் 3 போட்டியிலும் முறையே 277, 299, 296 என 3 முறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் வெற்றிகரமாக துரத்திய இங்கிலாந்து “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் தொடரில் 250க்கும் மேற்பட்ட இலக்கை 3 முறை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி” என்ற உலக சாதனை படைத்துள்ளது.

Jonny Bairstow ENg vs NZ

இங்கிலாந்தின் இந்த வெறித்தனமான வெற்றியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சற்று கலக்கத்துடன் காணப்படுகிறார்கள். ஏனெனில் அடுத்ததாக ஜூலை 1ஆம் தேதி இதே இங்கிலாந்து இந்தியாவை கடந்த வருடம் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் திண்டாடிக் கொண்டிருந்த இங்கிலாந்தை விராட் கோலி தலைமையிலான இந்தியா மண்ணை கவ்வ வைத்து 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

ரசிகர்கள் அச்சம்:
அந்த தோல்வி உட்பட சமீப காலங்களில் நிறைய தோல்விகளை சந்தித்தால் கடுப்பான இங்கிலாந்து வாரியம் ஜோ ரூட்டை கேப்டன் பதவியில் இருந்து விலக வைத்து பென் ஸ்டோக்சை புதிய கேப்டனாக அறிவித்தது. அத்துடன் அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய நியூசிலாந்தின் ஜாம்பவான் பிரண்டன் மெக்கலம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர்களது கூட்டணியில் முதல் தொடரிலேயே டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்துள்ள இங்கிலாந்து தற்போது புத்துயிர் பெற்று சொந்த மண்ணில் வலுவான மாஸ் காட்டும் அணியாக மிரட்டுகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : 5வது டெஸ்டில் விராட் கோலி இத்தனை ரன்களை அடிப்பார் – முன்னாள் ஜாம்பவான் வீரர் நம்பிக்கை

அப்படிப்பட்ட இங்கிலாந்தை ஏற்கனவே இத்தொடரில் பெற்றுக் கொடுத்த 2 வெற்றிகள் உட்பட மொத்தம் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனைப் படைத்த விராட் கோலி இல்லாத நிலையில் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் கேப்டன்ஷிப் செய்யவிருக்கும் ரோகித் சர்மா வீழ்த்தி வெற்றி பெறுவது மிகவும் கடினமாக மாறியுள்ளது. மேலும் அவர் கரோனா காரணமாக பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் தற்போது வெறித்தனமாக மாறியுள்ள இங்கிலாந்தை இந்தியா தோற்கடித்து 15 வருடங்களுக்கு பின் அந்நாட்டில் கோப்பையை வெல்வது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

Advertisement