அந்த டீமா இது ! ஒரே முடிவால் மொத்தமாக மாறிய இங்கிலாந்து டெஸ்ட் அணி – துவங்கிய மிரட்டல் வெற்றிநடை

Brendon Mcuullam Ben Stokes
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது போட்டி டிரென்ட் பிரிட்ஜ் நகரில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அற்புதமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய டார்ல் மிட்சேல் சதமடித்து 190 ரன்களும் டாம் ப்ளன்டால் தனது பங்கிற்கு 106 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் நட்சத்திரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் நியூசிலாந்துக்கு ஈடாக அற்புதமாக பேட்டிங் செய்து 539 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. அந்த அணிக்கு இளம் வீரர் ஓலி போப் சதமடித்து 145 ரன்கள் குவிக்க அவருடன் ரன் மெஷினாக பேட்டிங் செய்து வரும் ஜோ ரூட் சதமடித்து 176 ரன்களை விளாசினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ட்ரா எண்ணம்:
அதை தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்தை மேற்கொண்டு பெரிய ரன்கள் எடுக்க விடாமல் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து 284 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக வில் எங் 56, டேவோன் கான்வே 52 ரன்கள் எடுக்க எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்த டார்ல் மிட்செல் கடைசி வரை அவுட்டாகாமல் 62* ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 299 என்ற வெற்றி இலக்கு தெரிவதற்கு நான்கரை நாட்கள் முடிந்த காரணத்தாலும் இதற்கு முந்தைய காலங்களில் வெற்றியை கூட ட்ராவாக மாற்றிய இங்கிலாந்து இப்போட்டியையும் ட்ரா செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் ஜாக் கிராவ்லி 0, ஓலி போப் 18, ஜோ ரூட் 3, லீஸ் 44 என அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தின.

- Advertisement -

இங்கிலாந்தா இது:
அதனால் 93/4 என திணறிய இங்கிலாந்துக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை குவித்தனர். அதனால் வெற்றியை நோக்கி பயணித்த அந்த அணிக்கு தேனீர் இடைவெளிக்குப்பின் அதாவது கடைசி 30 ஓவரில் 160 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தேநீரைக் குடித்துவிட்டு தெம்பாக வந்தது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் ஆடிய ஜானி பேர்ஸ்டோ 14 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 136 (92) ரன்களை 147.83 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின் இந்த ஜோடிப் பிரிந்தாலும் கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 75* (70) ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 2019இல் ஹெண்டிங்க்லே ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் மறக்க முடியாத பினிஷிங் கொடுத்ததைப் போல் பவுன்டரியை விளாசி வெறித்தனமான பினிஷிங் கொடுத்தார். அதனால் 229/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் வென்றிருந்த காரணத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்ற விதத்தை பார்த்த ரசிகர்கள் இங்கிலாந்தா இது என்று வியக்கிறார்கள்.

- Advertisement -

மொத்தமாக மாற்றம்:
ஏனெனில் சமீப காலங்களில் ஜோ ரூட் தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த அந்த அணி ஆஷஸ் கோப்பை உட்பட கடந்த 2 வருடங்களில் சொந்த மண்ணில் நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடர்களில் கூட அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அதனால் கடுப்பான அந்நாட்டு வாரியம் ஜோ ரூட்டை ராஜினாமா செய்ய வைத்து பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் போன்ற அதிரடியானவர்களை கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் நியமித்தது.

1. அந்த முடிவு தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக மாறியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் 2021இல் இதே நியூசிலாந்துக்கு எதிராக 75 ஓவர்களில் 273 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கடைசி நாளில் விளையாடிய ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வெற்றிக்காக விளையாடாமல் டிரா செய்வதற்காக மெதுவாக விளையாடி இறுதிவரை 70 ஓவர்களில் 170/3 ரன்கள் மட்டுமே எடுத்து டிரா செய்தது.

- Advertisement -

2. ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்குள் அதே நியூசிலாந்து 72 ஓவர்களில் அதைவிட அதிகமாக நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை வெறும் 50 ஓவர்களிலேயே சேசிங் செய்து காட்டியுள்ள இங்கிலாந்து மொத்தமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேற்றம் – மாற்றுவீரர் இவர்தானாம்

3. மேலும் கடைசியாக கடந்த 5 தொடர்களில் தொடர்ச்சியாக தோற்று வந்த இங்கிலாந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

3. மொத்தத்தில் பென் ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் தலைமையில் மிரட்டலான வெற்றி பயணத்தை துவங்கியுள்ள இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிகழ்த்திய மாற்றத்தால் 2019இல் உலக கோப்பையை வென்றது போல் வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்ய ஆயத்தமாகியுள்ளது.

Advertisement