இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேற்றம் – மாற்றுவீரர் இவர்தானாம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 9ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது ஜூன் 19ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கிறது. அந்த தொடருக்கான அணியிலும் இளம் வீரர்களே இருப்பார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதோடு அந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லக்ஷ்மனன் செயல்படவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

INDvsENG

- Advertisement -

அதே வேளையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற போது கடைசி 5-வது போட்டி கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டியானது ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்க உள்ளதால் இங்கிலாந்து தொடருக்கான சீனியர் வீரர்களை கொண்ட இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்படுகிறது.

இந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணியானது நாளை இங்கிலாந்து பயணிக்க உள்ளனர். அந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த துணை கேப்டன் கே.எல் ராகுல் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

Rahul

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ராகுல் தற்போது முன்னெச்சரிக்கை காரணமாக இந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதன் காரணமாக கே.எல் ராகுலுக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட உள்ளார் என்றும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs RSA : 2 நாள் டைம் இருக்கு, அதுக்குள்ள நீங்க தயாரா இருங்க – பண்ட் மீது ஜாம்பவான் கடும் கோபம்

1) ரோஹித் ஷர்மா (கேப்டன்), 2) கேஎல் ராகுல் (துணை கேப்டன்) வெளியேற்றம் / மாயங்க் அகர்வால் , 3) ஷுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ஹனுமா விஹாரி, 7) சேத்தேஸ்வர் புஜாரா, 8) ரிஷப் பந்த் , 9) கே.எஸ்.பாரத் , 10) ரவீந்திர ஜடேஜா, 11) ரவிச்சந்திரன் அஷ்வின், 12) ஷர்துல் தாகூர், 13) முகமது ஷமி, 14) ஜஸ்பிரித் பும்ரா, 15) முகமது சிராஜ், 16) உமேஷ் யாதவ், 17) பிரசித் கிருஷ்ணா

Advertisement