மூளையை யூஸ் பண்ணா 600.. பீட்டர்சன் முகத்தில் கரியை பூசும் வகையில் சொதப்பிய இங்கிலாந்து.. ஆஸி அசத்தல்

AUS vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் அந்தத் தொடரின் 3வது போட்டி டிசம்பர் 16ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 371 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி ஆசஸ் தொடரில் முதல் முறையாக சதமடித்து 106, உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்களை குவித்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 9 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஓலி போப் 3 ரன்னில் நாதன் லயன் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

நம்பி வாயை விட்ட பீட்டர்சன்:

அதோடு நிற்காத லயன் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த பென்டகட்டை 29 (30) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 42/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 19 ரன்னில் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் நங்கூரமாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹாரி ப்ரூக் 45 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். லோயர் ஆர்டரில் ஜேமி ஸ்மித் 22, வில் ஜாக்ஸ் 6, பிரைடன் கார்ஸ் 0 ரன்களில் அவுட்டாகி பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 2வது நாள் முடிவில் இங்கிலாந்து 213/8 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஆஸ்திரேலியாவை விட 158 ரன்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்துக்கு களத்தில் பேன் ஸ்டோக்ஸ் 45*, ஜோப்ரா ஆர்ச்சர் 30* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

கரியை பூசிய ஆஸ்திரேலியா:

முன்னதாக அப்போட்டியின் முதல் நாளிலேயே சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா 326/8 ரன்களை குவித்து அசத்தியது. அப்போது அடிலெய்ட் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் இங்கிலாந்து மூளையை பயன்படுத்தி விளையாடினால் 600 ரன்கள் குவிக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இது பற்றி டுவிட்டரில் அவர் நேற்று மாலை பதிவிட்டது பின்ருமாறு. “அடிலெய்டில் முதல் நாளில் 326/8 ரன்கள் அடிப்பது சுமாரானது”

இதையும் படிங்க: 323 ரன்ஸ்.. 95 வருட சாதனையை உடைத்த கான்வே – லாதம் ஜோடி.. முதல் நாளே வெ.இ’ஸை நொறுக்கிய நியூஸிலாந்து

“ஏனெனில் அந்த பிட்ச் உலகிலேயே மிகவும் ஃபிளாட்னான ஒன்றாகும். அது நாளை இன்னும் ஃபிளாட்டாக மாறும். ப்ளீஸ் இங்கிலாந்து மூளையுடன் பேட்டிங் செய்து 600 ரன்கள் அடியுங்கள்” என்று பதிவிட்டார். ஆனால் அதற்குத் தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து 2வது நாளிலேயே 213/8 என சரிந்து சரிந்து கெவின் பீட்டர்சன் முகத்தில் கரியைப் பூசும் வகையில் பேட்டிங் செய்தது என்றே சொல்லலாம்.

Advertisement