தொடரின் பாதியிலேயே இங்கிலாந்து வீரராகள் இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்? – காரணம் இதோ

Stokes
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்த தொடரானது நடைபெற உள்ளதால் இரண்டு அணிகளுக்குமே இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேலையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விவரு அணிகளுக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் மட்டுமே முடிவடைந்த வேளையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவிலிருந்து புறப்பட்டு அபுதாபிக்கு சென்றுள்ளனர்.

இப்படி அவர்கள் ஏன் அபுதாபிக்கு தொடரின் பாதியிலேயே சென்றார்கள்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பத்து நாட்கள் இடைவெளி இருப்பதால் அவர்கள் அபுதாபிக்கு சென்று தற்போது பயிற்சி முகாமில் பங்கேற்க இருக்கின்றனர். அங்கு பயிற்சி மற்றும் புத்துணர்ச்சி வகுப்புகளில் அவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அவரை எப்படி சமாளிக்குறதுன்னே தெரியல.. அட்டாக் பண்ண திட்டம் போடணும்.. ப்ரெண்டன் மெக்கல்லம் பேட்டி

அந்த பயிற்சி முகாம் முடிவடைந்த பிறகு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். ஏற்கனவே இந்த இந்திய தொடருக்கு கிளம்புவதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் அபுதாபி சென்று பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement