உ.கோ ஜெயிக்காத சோக்கர்ன்னு சொல்லி அவரை ஸ்லெட்ஜ் பண்ணுங்க.. இங்கிலாந்துக்கு மான்டி பனேசர் ஐடியா

Manty Panesar
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 12 வருடங்கள் கழித்து வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

கடைசியாக 2012இல் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த அணி என்ற பெருமையைக் கொண்டுள்ள இங்கிலாந்து தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வருகிறது. எனவே இம்முறை அந்த அதிரடி அணுகு முறையில் விளையாடி இந்தியாவை சாய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

- Advertisement -

சோக்கர்ன்னு சொல்லி:
ஆனால் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களைத் தாண்டி இங்கிலாந்து வீழ்த்தும் மிகவும் கடினம் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தியாவை சாய்ப்பதற்கு அதன் முதுகெலும்பு பேட்ஸ்மேனான விராட் கோலியை இங்கிலாந்து விரைவில் அவுட்டாக்க வேண்டும் என முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

அதற்கு ஐசிசி தொடர்களில் தொடர்ந்து இந்தியா தோல்வியை சந்தித்து வருவதை காரணமாக வைத்து சோக்கர் என்று சொல்லி விராட் கோலியை இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவருடைய ஈகோவுடன் விளையாடி மனதளவில் சிக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஐசிசி ஃபைனல் என்று வரும் போது நீங்கள் சோக்கர்கள் என்பது போன்றவற்றையும் அவரிடம் இங்கிலாந்து வீரர்கள் சொல்ல வேண்டும்”

- Advertisement -

“அது போல அவர்கள் ஏதாவது சொல்லி விராட் கோலியிடம் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டும். ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி வென்றதில்லை. அப்படி சொல்வது விராட் கோலியை மனதளவில் கிள்ளிவிடும்” என்று கூறினார். முன்னதாக பெரிய ஈகோவை கொண்டுள்ள விராட் கோலியை இம்முறை அவருடைய சொந்த மண்ணில் அவுட்டாக்கி அடக்குவேன் என்று இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சனும் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியிலும் ரிங்கு சிங் இடம்பிடிக்க வாய்ப்பு.. ஏன் தெரியுமா? – தெளிவான விளக்கம் இதோ

ஆனால் வரலாற்றில் மிட்சேல் ஜான்சன் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை தம்மை ஸ்லெட்ஜிங் செய்த பவுலர்களுக்கு விராட் கோலி அபாரமாக செயல்பட்டு தக்க பதிலடிகளை கொடுத்துள்ளார். எனவே இம்முறை தங்களுடைய சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் வம்பிழுக்கும் இங்கிலாந்து பவுலர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement