ஆட்டமிழந்து வெளியேறிய பாக் பேட்ஸ்மேனை கைகுலுக்கி வழியனுப்பிய இங்கிலாந்து வீரர்கள் – நெகிழ்ச்சியான தருணம்

Azhar-Ali-1
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டம் கராச்சி மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்கள் குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணியானது 304 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அசார் அலி தனது முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது 4 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அவரிடம் வந்து கைகுலுக்கி வழி அனுப்பிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அவருக்கு கைகொடுத்து வழியனுப்பிய பின்னணி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அசார் அலி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தால் அவர் விளையாடிய இந்த போட்டியே அவரது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கைகுலுக்கி வழி அனுப்பினர்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி அவர் பெவிலியினை நோக்கி நடந்த போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களது பேட்டின் மூலம் அரணமைத்து அவருக்கு மரியாதை செலுத்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவருக்கு விடை கொடுத்தனர்.

இதையும் படிங்க : கொஞ்ச நஞ்சமா பேசுனீங்க, ரமீஸ் ராஜாவுக்கு குட் பைய் சொல்லும் பாகிஸ்தான் வாரியம் – வெளியான புதிய தகவல் இதோ

பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7097 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு முச்சதம், மூன்று இரட்டை சதங்கள் மற்றும் 19 சதங்கள், 35 அரைசதங்கள் என அவர் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement