கொஞ்ச நஞ்சமா பேசுனீங்க, ரமீஸ் ராஜாவுக்கு குட் பைய் சொல்லும் பாகிஸ்தான் வாரியம் – வெளியான புதிய தகவல் இதோ

PAK Ramiz Raja
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை கோட்டை விட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த வருடம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 24 வருடங்கள் கழித்து பங்கேற்ற டெஸ்ட் தொடரிலும் 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் ஃபைனலில் இலங்கையிடம் மண்ணை கவ்வியது.

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கில் மீண்டும் தோல்வியை சந்தித்த அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நெதர்லாந்து கொடுத்த அதிர்ஷ்டத்தால் 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் மட்டும் பேசியதை செயலில் காட்டத் தவறியதால் மீண்டும் ஃபைனலில் அதே இங்கிலாந்திடம் தோற்றது. அப்படி வெளிநாட்டு மண்ணிலும் சொந்த மண்ணிலும் அடுத்தடுத்த தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் உலக அளவில் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

ராஜாவுக்கு செக்:
அப்படி களத்தில் பாகிஸ்தான் அணி செயல்படுவதைப் போலவே களத்திற்கு வெளியே பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா செயல்பட்டு வருகிறார். ஏனெனில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது தார் ரோட் போல இருந்த மைதானங்களால் கடுப்பான ஐசிசி கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியது. அப்போது புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த அவர் அடுத்த தொடருக்குள் தரமான பிட்ச்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி பிட்ச் மீண்டும் தார் ரோடு போல இருந்ததால் கடுப்பான ஐசிசி மீண்டும் கருப்பு புள்ளியை வழங்கியது. அதனால் வாயில் மட்டும் பேசியதை செயலில் காட்டத் தவறிய அவர் சமீப காலங்களாகவே அண்டை நாடான இந்தியாவுடன் வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக பணக்கார இந்திய அணியை உலகக் கோப்பையில் தோற்கடித்து விட்டோம், நாங்கள் பங்கேற்காத 2023 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றால் அதை யார் பார்ப்பார் என்ற வகையில் ஏற்கனவே இருநாட்டுக்கும் இடையே இருக்கும் விரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் சமீப காலங்களில் அவர் பேசி வருகிறார்.

- Advertisement -

அத்துடன் சுமாரான அணி தேர்வு, பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமல் வெளிநாட்டவர்களுக்கு தேடிச்சென்று வாய்ப்பு கொடுப்பது, அதைப் பற்றி விமர்சிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது போன்ற அவரது நடவடிக்கைகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது தலைமையில் தொடர் தோல்விகளும் பரிசாக கிடைத்து வருவகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான முன்னாள் ஜாம்பவான் வீரர் இம்ரான் கான் பரிந்துரையில் கடந்த 2021 செப்டம்பரில் புதிய வாரிய தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்றார்.

ஆனால் தற்போது புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள செபாஸ் செரிப் அவர்களை முன்னாள் தலைவர் நஜாம் செதி சமீபத்தில் லாகூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தற்போதைய தலைவராக இருக்கும் ரமேஷ் ராஜா தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சந்தித்துள்ள வீழ்ச்சியை பற்றி அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது. ஏற்கனவே புதிய பிரதமரும் அவரது தலைமையில் பாகிஸ்தான் வாரியத்தின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதால் மீண்டும் நஜாம் செதி புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: IND vs BAN : 2வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகும் முக்கிய நட்சத்திர இந்திய வீரர் – அதிகாரபூர்வ தகவல் இதோ

இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வாரியம் உறுப்பினர் அளித்த பேட்டியில் தெரிவித்தது பின்வருமாறு. “ஆம் பின்புலத்தில் நிச்சயமாக அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நஜாம் செதி லாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி பிரதமரிடம் பேசியுள்ளார். அதனால் அவர் விரைவில் ரமீசுக்கு பதிலாக புதிய தலைவராக பொறுப்பேற்கலாம்” என்று கூறினார். முன்னதாக இம்ரான் கான் புதிய பிரதமராக வந்த காரணத்தால் நஜாம் செதி தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement