- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மண்டையில் அடிப்போம் பரவால்லயா? ஜடேஜாவை மிரட்டி கெஞ்சிய 4 இங்கி வீரர்கள்.. வெளியான ஸ்டம்ப் மைக் ஆதாரம்

மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387, இங்கிலாந்து 669 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சுதர்சன் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நங்கூரமாக விளையாடிய கேப்டன் கில் 103, கேஎல் ராகுல் 90 ரன்கள் அடித்து காப்பாற்றினர். அதே போல வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவை இன்னிங்ஸ் தோல்யிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தினர்.

- Advertisement -

ஜடேஜாவை மிரட்டிய இங்கிலாந்து:

தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் இருவருமே சதத்தை நெருங்கிய போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக்கொள்ள கை கொடுத்தார். ஆனால் சுந்தர், ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் கை கொடுத்த அவருடைய அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில் அந்தப் பரபரப்பான தருணத்தின் ஸ்டம்ப் மைக் பதிவுகளை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிர்வாகம் யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அதில் சதமடிக்க விரும்பினால் பவுன்சர்களை போட்டு உங்களுடைய மண்டையை அடிப்போம் என்ற வகையில் 4 இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜாவை மிரட்டி கெஞ்சியுள்ளார்கள். அந்த உரையாடல்கள் பின்வருமாறு.

- Advertisement -

மிரட்டலான கெஞ்சல்:

ஜோப்ரா ஆர்ச்சர்: ஒருவேளை நீங்கள் சதத்தை அடிக்க விரும்பினால், நீங்கள் முன்பு போலவே பேட்டிங் செய்ய வேண்டும்
ஜாக் கிராவ்லி: இது உங்களுடைய முடிவா? நீங்கள் தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பினால் நாங்கள் உங்கள் மேலே பவுன்ஸர்களைப் போடுவோம்
ரவீந்திர ஜடேஜா: அதைத்தானே நீங்கள் நாள் முழுவதும் செய்தீர்கள்

இதையும் படிங்க: பிளேயிங் லெவனில் இடம்பெறாமலே 4 ஆவது போட்டியில் உலக சாதனை நிகழ்த்திய துருவ் ஜுரேல் – என்ன தெரியுமா?

பென் ஸ்டோக்ஸ்: அதற்காக உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை, ஒரு மணி நேரமா? அப்படியானால் நீங்கள் 100 அடிப்பீர்கள், அவர் (சுந்தர்) 90 அடிப்பார். நாங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு இன்னும் தாமதமாகும்
ஜடேஜா: உங்களுக்காக, சரி விளையாடவில்லை என்று என்னால் சொல்ல முடியாது
ஸ்டோக்ஸ்: நீங்கள் ஹரி ப்ரூக் அல்லது பென் டக்கெட் போன்றவர்களுக்கு எதிராக அடித்து சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா?
கிராவ்லி: நீங்கள் கையைக் கொடுத்து விட்டால் அனைத்தும் முடிந்து விடும்
ஜடேஜா: என்னால் எதுவும் செய்ய முடியாது
கிராவ்லி: ஆம் உங்களால் முடியும், எங்களுடன் கை கொடுத்துக்கொள்ள முடியும்.

- Advertisement -