பிளேயிங் லெவனில் இடம்பெறாமலே 4 ஆவது போட்டியில் உலக சாதனை நிகழ்த்திய துருவ் ஜுரேல் – என்ன தெரியுமா?

Dhruv Jurel
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த போட்டியை டிராவில் முடிந்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் அபாயத்திலிருந்து தப்பிய இந்திய அணி இந்த தொடரினை உயிரப்புடன் வைத்துள்ளது. இந்த நான்காவது போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் காலில் காயமடைந்தார்.

உலகசாதனை நிகழ்த்திய துருவ் ஜுரேல் :

பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக வலியால் தவித்த அவர் முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்தாலும் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் போது அடிக்கடி காயத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்தார். அந்த வகையில் இந்த நான்காவது போட்டியின் போது காயம் காரணமாக பண்ட் வெளியேறியதால் விக்கெட் கீப்பிங் செய்த துருவ் ஜுரேல் பிளேயிங் லெவனில் இடம் பெறாமலேயே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் துருவ் ஜுரேல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் மாற்று வீரராக களத்திற்கு வந்து ஒரே இன்னிங்ஸில் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற சாதனையை துருவ் ஜுரேல் படைத்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரை ஜுரேல் ஸ்டம்பிங் செய்திருந்தார்.

- Advertisement -

இதன்மூலம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்டம்பிங் செய்த மாற்று விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக பல்வேறு விக்கெட் கீப்பர்கள் ஒரு இன்னிங்ஸ்கலில் ஒரு ஸ்டம்பிங் செய்திருந்தாலும் இவர் இரண்டு ஸ்டம்பிங்கை செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : கடைசி போட்டியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 202 ரன்கள் அடித்திருக்கும் வேளையில் அடுத்த போட்டியில் இருந்து பண்ட் வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக ஜுரேல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement