- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் வரலாற்று கனவில் மண்ணை அள்ளி போட்ட இங்கிலாந்து அணி -பாவம்பா ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது. 5 ஆவது போட்டி துவங்கும் முன்னர் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் 12-ம் தேதி துவங்கிய ஆஷஸ் தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 225 ரன்களும் குவித்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 329 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த இலக்கினை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதன் மூலம் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கடைசி போட்டியில் டிரா செய்தால் கூட எப்படியம் தொடரைக் கைப்பற்றும் என்று நினைத்த ஆஸ்திரேலிய அணியின் கனவை இங்கிலாந்து வீரர்கள் தகர்த்து உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது. மேலும் 47 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் தொடர் இரு அணிகளுக்கு வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by