அந்த 2 தரமான பிளேயர்ஸ் எதிர்கொண்டு இந்தியாவை சாய்க்க காத்திருக்கோம்.. மெக்கல்லம் பேட்டி

Brendon Mccullam
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வரலாற்றில் முதல் முறையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அந்த தொடருக்கு நிகராக வரும் பிப்ரவரி மாதம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஜோ ரூட் தலைமையில் ஒரு கட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கே திண்டாடிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை தோற்கடித்த அந்த அணி தற்போது இந்தியாவையும் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

மெக்கல்லம் நம்பிக்கை:
இருப்பினும் 2012க்குப்பின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 மகத்தான வீரர்களை கொண்ட இந்திய அணியை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவின் மிகவும் தைரியம் வாய்ந்த கேப்டன்ஷிப் எனக்கு பிடித்துள்ளது. அவர் ரிஸ்க் எடுத்து போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவிடம் இருக்கும் திறமைக்கு அது போன்ற அதிரடியான யுக்திகளை நீங்கள் கையாண்டால் நிறைய நல்ல வெற்றிகளை சாதிக்க முடியும். அவர் இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நீண்ட காலமாக நல்ல கேப்டனாக செயல்பட்டு வருகிறார்”

- Advertisement -

“விராட் கோலியை பொறுத்த வரை ஆர்சிபி அணியில் இருந்த போது அவருடன் சேர்ந்தும் அதன் பின் எதிராகவும் விளையாடியுள்ளேன். அந்த சமயத்திலேயே அவர் வருங்கால சூப்பர் ஸ்டாராக செயல்பட்டு வந்தார். அவர் எப்போதுமே கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணங்களை பெரிய போட்டியில் பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தற்போது பெறும் அனைத்து பாராட்டுக்கு அவர் தகுதியானவர்”

இதையும் படிங்க: ரஷித் கானை முந்தி.. 23 வயதிலேயே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இந்திய வீரர் சாதனை

“எனவே ரோஹித் மற்றும் விராட் மட்டுமல்லாமல் மற்ற இந்திய வீரர்களுக்கு எதிராக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெறும் சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தாலும் அதற்காக காத்திருக்கிறோம். அத்தொடரில் உலகின் சிறந்த அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது. அதில் நாங்கள் எந்த மாதிரியான அணி என்பதையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் ” என்று கூறினார்.

Advertisement