
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் வென்றது. அடுத்ததாக அந்த 2 அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. அந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
மூன்றாவது போட்டி நவம்பர் 15ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் வந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லெவிஸ் 3, ஷாய் ஹோப் 4, நிக்கோலஸ் பூரான் 7, ராஸ்டன் 7, ஹெட்மேயர் 2 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
அதனால் 37-5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோவ்மன் போவல் 54 (41) ரன்கள் குவித்து கை கொடுத்தார். அவருடன் செபார்டு 30 (28), அல்சாரி ஜோசப் 21 (19) ரன்கள் எடுத்ததால் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 145-8 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன், சாகிப் முகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் 146 ரன்கள் துரத்திய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 4, ஜோஸ் பட்லர் 4, ஜேக்கப் பேத்தல் 4 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் வில் ஜேக்ஸ் நிதானமாக விளையாடி 32 (33) ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் ஷாம் கரண் அதிரடியாக 41 (26) ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 39 (28) ரன்களும் குவித்தார்கள். அதனால் 19.2 ஓவரில் இங்கிலாந்து போராடி 149-7 ரன்கள் எடுத்தது.
அதன் காரணமாக 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று இத்தொடரை 3 – 0* (5) கணக்கில் ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இதன் மூலம் 2019க்குப்பின் 5 வருடங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இங்கிலாந்து ஒரு டி20 தொடரையும் வென்றுள்ளது சாதனை படைத்துள்ளது. 2019க்குப்பின் கடைசியாக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிய 5 தொடர்களில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: ஆமா சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து போன் வந்தது உண்மைதான்.. தோனியை இன்னும் பாக்கல – ஆயுஷ் மாத்ரே
அந்த 5 தொடர்களிலும் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து தற்போது அதை உடைத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாகிப் முஹம்மது ஆட்டநாயகன் விருது பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக அகில் ஹொசைன் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.