ஆமா சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து போன் வந்தது உண்மைதான்.. தோனியை இன்னும் பாக்கல – ஆயுஷ் மாத்ரே

Ayush-Mhatre
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக அக்டோபர் 31-ஆம் தேதி இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது. அந்தவகையில் 5 முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது.

தோனியுடன் விளையாடுவது என் கனவு :

சென்னை அணி எப்போதுமே திறமையான வீரர்களை தேடி கண்டுபித்து அவர்களை பயிற்சிக்கு அழைப்பது வழக்கம். அந்த வகையில் ரஞ்சி டிராபி தொடரில் அசதிவரும் 17 வயதான மும்பை வீரரான ஆயுஷ் மாத்ரேவின் திறனை அறிந்து அவரை பயிற்சிக்கு அழைத்துள்ளது என்றும், தோனி தான் அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியது.

- Advertisement -

இப்படி ஆயுஷ் மாத்ரேவை பயிற்சிக்கு அழைத்ததே அவரின் திறனை பரிசோதித்து அவரை ஏலத்தில் எடுக்கத்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து வந்த அழைப்பு குறித்து தற்போது பேசியுள்ள ஆயுஷ் மாத்ரே கூறுகையில் : சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து வந்த அழைப்பு உண்மைதான். விரைவில் நான் சென்னை சென்று பயிற்சியில் கலந்துகொள்ள இருக்கிறேன்.

ஆனாலும் தற்போது நான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருவதால் அதனை சிறப்பாக முடிக்க விரும்புகிறேன். அதன் பிறகே சி.எஸ்.கே நிர்வாகத்தின் பயிற்சியில் ஈடுபடுவேன். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேனா என்பது உறுதியாக தெரியாது. ஒருவேளை அவர்கள் என்னை தேர்வு செய்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

- Advertisement -

அப்படி சி.எஸ்.கே அணி என்னை ஏலத்தில் எடுத்தால் என்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் சி.எஸ்.கே அணிக்காக வழங்க காத்திருக்கிறேன். தோனியுடன் விளையாட வேண்டும் என்பது எந்தவொரு இளம் வீரருக்குமே மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்தவகையில் தோனியுடன் இணைந்து விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு.

இதையும் படிங்க : கிங் கோட்டை வந்துருக்காரு.. 3 இன்னிங்ஸில் இதை செஞ்சா ஆஸியில் நீங்க தான் ராஜா.. கோலிக்கு சாஸ்திரி அட்வைஸ்

நான் இதுவரை தோனியை நேரில் பார்த்ததில்லை. இருப்பினும் விரைவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். சி.எஸ்.கே அணி நிர்வாகம் எனக்கு விடுத்த அழைப்புக்கு நன்றி. நிச்சயம் நான் சென்னை அணியின் பயிற்சியில் கலந்துகொண்டு என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என ஆயுஷ் மாத்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement