329 ரன்ஸ்.. லிவிங்ஸ்டன் மிரட்டல்.. வெ.இ அணியை நொறுக்கிய இங்கிலாந்து.. சாதனை சேசிங்

- Advertisement -

தங்கம்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் 2ஆம் தேதி ஆன்டிகுவா நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் ப்ரண்டன் கிங் 7, எவின் லெவிஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாய் ஹோப் மற்றும் கேசி கார்ட்டி 3வது விக்கட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதில் கேசி கார்ட்டி அரை சதமடித்து 71 ரன்களில் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்:

அடுத்து வந்த ரூத்தர்போர்ட் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய அரை சதமடித்து 54 (36) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த ஹெட்மயர் 24 (11) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய கேப்டன் ஹோப் சதமடித்து 117 (127) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதியில் ராஸ்டன் சேஸ் 20*, மேத்தியூ போர்ட்ஜ் 23* (11) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 328-6 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜான் டர்னர், அடில் ரசித் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 329 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு வில் ஜேக்ஸ் 12, ஜோர்டான் கோக்ஸ் 4 ரன்களில் அவுட்டானார்கள். அதே போல மறுபுறம் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய துவக்க வீரர் பிலிப் சால்ட் 59 (59) ரன்கள் விளாசி அவுட்டானார்.

சாதனை சேசிங்:

ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜேக்கப் பேத்தல் தனது பங்கிற்கு அரை சதமடித்து 55 (57) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சாம் கரண் 5வது விக்கெட்டுக்கு 130 பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பங்கிற்கு 52 (52) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: கொல்கத்தா அணியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற இதுதான் காரணம் – நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

இருப்பினும் மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கிய லிவிங்ஸ்டன் 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்து 124* (85) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 47.3 ஓவரிலேயே 329-5 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்த இங்கிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேத்யூ போர்ட்ஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement