அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றதா?

PAK vs ENG
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 337/9 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு 32 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 31, ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜோ ரூட் 60 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கேப்டன் பட்லர் 27, ஹாரி ப்ரூக் 30 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

கிளம்பிய பாகிஸ்தான்:
அதைத் தொடர்ந்து 338 ரன்களை 6.2 ஓவரில் சேசிங் செய்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்று அசாத்தியமான வாய்ப்புடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 0, பக்கார் ஜமான் 1 ரன்களில் அவுட்டானதுமே அந்த வாய்ப்பு பறிபோனது. அதனால் 10/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அதிரடியாக விளையாட வேண்டிய கேப்டன் பாபர் அசாமும் 38 ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்மான் 36 ரன்களில் கிளீன் போல்ட்டானார்.

அதன் காரணமாக ஆரம்பத்திலேயே வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் சவுத் சாக்கில் 29, சல்மான் ஆஹா 51 ரன்களில் அவுட்டாகி கை விட்டார்கள். அதனால் கடைசியில் அதிரடியாக சாகின் அப்ரடி 25, ஹரிஷ் ரவூப் 35 ரன்கள் எடுத்த போதிலும் 43.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார் வெற்றி பெற்ற இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3, மொய்ன் அலி 2, காஸ் அட்கின்சன் 2, அடில் ரசித் 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

இந்த தோல்வியால் 1992 போல கோப்பையை வென்று இந்தியர்களுக்கு அவருடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த பாகிஸ்தான் ஒரு வழியாக எந்த கணக்கையும் போடாமல் உலக கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. குறிப்பாக இந்தியாவில் மைதானங்கள் மற்றும் பவுண்டரிகள் சிறியதாக இருப்பதாகவும் பாதுகாப்பு சரியில்லை என்றும் ஐசிசி புதிய பந்துகளை கொடுக்கிறது என்றும் விமர்சித்த பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் தோல்வியை சந்தித்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க: அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றதா?

மறுபுறம் அடித்து நொறுக்கி கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு அந்த வாய்ப்பை தவற விட்டாலும் ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை நிறைவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக 9 போட்டிகளில் 6 தோல்வி 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்ற நிம்மதியுடன் நாடு திரும்புகிறது.

Advertisement