ஸ்டோக்ஸ் அசத்தல்.. நெதர்லாந்தை வெளியேற்றிய இங்கிலாந்து.. சாம்பியன்ஸ் ட்ராபி மானத்தை காப்பாற்றியதா?

ENG vs NED
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 8ஆம் தேதி புனே நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களில் அவுட்டானார். மறுபடியும் தொடர்ந்து அசத்திய மற்றொரு துவக்க வீரர் டேவிட் மாலனுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் 28 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஹாரி ப்ரூக் 11, கேப்டன் பட்லர் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து நிம்மதி:
போதாக்குறைக்கு மொயின் அலியும் 4 ரன்களில் அவுட்டானதால் 192/6 என சரிந்த இங்கிலாந்து மீண்டும் தடுமாறு துவங்கியது. ஆனால் அப்போது நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி தனது முதல் உலகக்கோப்பை சதமடித்தார். அவருடன் 7வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கிறிஸ் ஓக்ஸ் அதிரடியாக 51 (45) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 108 (84) ரன்கள் குவித்ததால் 50 ஓவர்களில் இங்கிலாந்து 339/9 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 340 என்ற கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு மேக்ஸ் ஓ’தாவுத் 5 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஆக்கர்மேன் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய பரேசி 37 ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 68/3 என தடுமாறிய நெதர்லாந்தை மிடில் ஆர்டரில் எங்கேல்பேர்ச்ட் 33, கேப்டன் எட்வர்ட்ஸ் 38 ரன்கள் எடுத்து காப்பாற்ற போராடியும் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். அந்த நிலைமையில் நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி 10 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் நிதமனரு அதிரடியாக விளையாடி 41* ரன்கள் எடுத்த போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 37.2 ஓவரிலேயே நெதர்லாந்தை 179 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் அசத்தல்.. நெதர்லாந்தை வெளியேற்றிய இங்கிலாந்து.. சாம்பியன்ஸ் ட்ராபி மானத்தை காப்பாற்றியதா?

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி மற்றும் அடில் ரசித் ஆகிய ஸ்பின்னர்கள் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதனால் 6வது தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. மறுபுறம் 2வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியதுடன் கடைசி போட்டியில் வென்றால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்து தங்களுடைய மானத்தை தக்க வைத்துள்ளது.

Advertisement