இந்தியாவை சாய்க்க வரும் லெஜெண்ட்.. 2 மாற்றங்களுடன் பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி

IND vs ENG 22
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை எளிதாக தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்சில் ஓலி போப் 196 ரன்கள் அடித்ததால் கொதித்தெழுந்த இங்கிலாந்து வெறும் 231 ரன்களை இலக்காக வைத்து இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி மகத்தான வெற்றி பெற்றது.

- Advertisement -

பிளேயிங் லெவன்:
அந்த வகையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்ப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து அதை செயலிலும் செய்து காட்டியது. அதே வேகத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கும் இரண்டாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து தயாராகியுள்ளது. இந்நிலையில் அந்த போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் அணியை ஒருநாள் முன்பாகவே இங்கிலாந்து மீண்டும் தைரியமாக வெளியிட்டுள்ளது.

அதில் முதல் போட்டியில் காயத்தை சந்தித்த முதன்மை ஸ்பின்னர் ஜேக் லீச் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இளம் ஸ்பின்னர் சோயப் பஷீர் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 6 உள்ளூர் முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 20 வயதாகும் அவர் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை தோற்கடிப்பதற்காகவே இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் முதல் போட்டியில் தாமதமான விசா காரணத்தால் விளையாடாத அவர் தற்போது 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி இந்தியாவை தோற்கடித்த டாம் ஹார்ட்லியை போல இவரை இரண்டாவது போட்டியில் அறிமுகமாக இங்கிலாந்து களமிறக்குகிறது. அத்துடன் முதல் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்காமல் தடுமாறிய மார்க் வுட்டுக்கு பதிலாக 42 வயதாகும் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது போட்டியில் சேர்க்கப்படுவதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அபாரமான ரெகார்ட் வெச்சுருக்கும்.. அவர் சாதாரண பிளேயர் இல்ல.. அறிமுகமாக இறக்குங்க.. ஏபிடி ஆதரவு

இதற்கு முன் இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி 2வது போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் பிளேயிங் லெவன்: ஜாக் கிராவ்லி, பென் டுக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (கீப்பர்), ரெஹன் அஹ்மத், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Advertisement