இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணி மோதும் டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில்’ நான் ரன் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இந்திய அணி வெற்றி பெற்றால் போதும்’ என்று விராட் கோலி கூறிய கருத்து பொய்யானது என்று இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை அதே 2-1 என்ற கண்ணகில் தவறவிட்டது. இதை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
டி20 போட்டியில் 110 ரன்களை குவித்திருந்த விராட் கோலி, அதன் பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளில் 191 ரன்களை எடுத்திருந்தார். அதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில் “நான் ரன் அடிக்கிறேனா,இல்லையா என்பது முக்கியம் இல்லை. இந்திய அணி வெற்றி பெறுகிறதா என்பது தான் முக்கியம்” என்று தெரிவித்திருந்தார்.

விராட் கோலி கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில் “இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றில் பெற்றால் அது பெரிய விடயம் தான். விராட் அவருடைய அணிக்காக ரன்கள் குவிக்க ஆவலாக இருப்பார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர், விராட் கோலி கடினமாக பயிற்சி மேற்கொண்டிப்பார் என்பது எனக்கு உறுதியாக தெரியும்.எனவே, இந்த போட்டி கோலிக்கு , இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான போட்டியாகும்.