ஆஷஸ் தொடரை தொடர்ந்து மீண்டும் மோசமான நிலையை சந்தித்த இங்கிலாந்து – அடப்பாவமே

pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணியானது தற்போது இயான் மோர்கன் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

wivseng

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று இரவு பிரிட்ஜ் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணியானது 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் க்றிஸ் ஜோர்டான் 28 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 22 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

king

அதனை தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : 2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் இவர்தான். ஐ.சி.சி தேர்வு செய்த அந்த வீரர் – யார் தெரியுமா?

ஏற்கனவே ஆஷஸ் தொடரில் சந்தித்த மோசமான தோல்விக்கு பிறகு தற்போது மீண்டும் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement