82 ரன்ஸ்.. மேத்தியூஸ் மொத்த அனுபவத்தை இறக்கியும் தடுமாறும் இலங்கை சாதிக்குமா? இங்கிலாந்து வெல்லுமா?

ENG vs SL Day 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 236 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயா பஷீர் மற்றும் கிறிஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து கடுமையாக போராடி 358 ரன்கள் குவித்து இலங்கையை விட முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 24 வயது இளம் வீரர் ஜேமி ஸ்மித் சதமடித்து 111 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அசத்தல்:

அவருடன் ஹாரி ப்ரூக் 56, நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 42, டான் லாரன்ஸ் 30 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு கை கொடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4, பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதன் பின் 122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய இலங்கைக்கு மதுசங்கா, குசால் மெண்டிஸ் ஆரம்பத்திலே டக் அவுட்டானார்கள்.

அதனால் 1-2 என ஆரம்பத்திலேயே திணறிய இலங்கைக்கு அனுபவ வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் நங்கூரமாக விளையாட துவங்கினார். ஆனால் எதிர்ப்புறம் கருணரத்னே 27 ரன்களிலும் கேப்டன் டீ சில்வா 11 ரன்களிலும் அவுட்டாகி கைகொடுக்க தவறினர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மேத்யூஸ் அரை சதமடித்து இலங்கைக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

வெற்றி யாருக்கு:

அப்படியே தனது மொத்த அனுபவத்தையும் பயன்படுத்தி சதமடித்து இலங்கையை தூக்குவார் என்று அவர் 65 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த ரத்நாயகே 10 ரன்களில் அவுட்டானாலும் கமிண்டு மெண்டிஸ் நிதானமாக விளையாடி வருகிறார். அதனால் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை 204-6 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கமிண்டு மெண்டிஸ் 56*, காயத்தை தாண்டி மீண்டும் விளையாடும் தினேஷ் சண்டிமால் 20* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: 164 ரன்ஸ்.. வரலாறு காணாத நிகழ்வு.. ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள்.. பெங்களூருவுக்கு நேர்ந்த பரிதாபம்

இருப்பினும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்துள்ள அந்த அணி வெறும் 82 ரன்களை மட்டுமே முன்னிலையாக கொண்டுள்ளது. அதனால் எஞ்சிய 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை 150 – 200 ரன்களுக்குள் கட்டுபடுத்தினால் இங்கிலாந்து வெல்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. மறுபுறம் மான்செஸ்டர் பிட்ச் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே இங்கிருந்து போராடி 200 – 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இலங்கையும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

Advertisement