- Advertisement -
உலக கிரிக்கெட்

1 ரன்னில் இங்கிலாந்தின் உலக சாதனையை உடைத்த ஆஸி.. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போட்டி வினோத உலக சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பார்படாஸ் நகரில் 17வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 201/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 39, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 202 ரன்களை சேசிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பிலிப்ஸ் சால்ட் 37, கேப்டன் ஜோஸ் பட்லர் 42 ரன்கள் அடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் வில் ஜேக்ஸ் 10, ஜானி பேர்ஸ்டோ 7, மொய்ன் அலி 25, ஹரி ப்ரூக் 20, லியாம் லிவிங்ஸ்டன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் 20 ஓவரில் 165/6 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வினோத சாதனை:
மறுபுறம் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு டிராவிஸ் ஹெட் 34, டேவிட் வார்னர் 39, மிட்சேல் மார்ஷ் 35, கிளன் மேக்ஸ்வெல் 28, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30, டிம் டேவிட் 11, மேத்யூ வேட் 17*, பட் கமின்ஸ் 0, மிட்சேல் ஸ்டார்க் 0 ரன்கள் அடித்தனர்.

அப்படி யாருமே 50 ரன்கள் அடிக்காமல் இப்போட்டியில் ஆஸ்திரேலியா 201/7 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அரை சதத்தை கூட அடிக்காமல் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தனித்துவமான உலக சாதனை ஆஸ்திரேலிய படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி ஒரு அரை சதத்தை கூட அடிக்காமல் 200/6 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அந்த வகையில் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் சாதனையை ஆஸ்திரேலியா உடைத்தது. அதே போல இப்போட்டியில் 202 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கும் எந்த பேட்ஸ்மேன்களும் அரை சதமடிக்கவில்லை. அந்த வகையில் ஒரு அரை சதம் கூட அடிக்காமலேயே இப்போட்டியில் மொத்தம் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 366 ரன்கள் எடுத்தன.

இதையும் படிங்க: விராட் கோலியை இந்தவொரு விஷயத்துல அடிச்சிக்க ஆளே கிடையாது – ரோஹித் சர்மா புகழாரம்

இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அரை சதம் கூட அடிக்காமலேயே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டி என்ற வினோதமான உலக சாதனையை ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டி நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் 2010 டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரை சதம் அடிக்கப்படாமல் 327 ரன்கள் குவிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -