விராட் கோலியை இந்தவொரு விஷயத்துல அடிச்சிக்க ஆளே கிடையாது – ரோஹித் சர்மா புகழாரம்

Rohit
- Advertisement -

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 இந்த போட்டி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே இந்த உலககோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அனைவரும் ஒரு அணியாக இணைந்து சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் ஒன்று இரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவருமே சிறப்பாக செயல்பட்டால் தான் போட்டியில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் இந்த போட்டியில் நமது அணியை சேர்ந்த அனைவராலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முக்கியமான தொடர்களில் விளையாட அனுபவம் கொண்டவர் விராட் கோலி அந்த அனுபவத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று ரோஹித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முன்னாடியே வந்ததால் இந்தியாவுக்கு சாதகம் கிடையாது.. அதை மறந்துட்டு வரும் பாகிஸ்தான் வெல்லும்.. கேரி கிர்ஸ்டன்

இந்த தொடரின் முதல் போட்டியில் 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து சொதப்பிய விராட் கோலி இன்று பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement