ENG vs IRE : 31 ஓவர்களில் 280 ரன்கள்.. முரட்டு அடி அடித்த இங்கிலாந்து – அதிர்ஷ்டத்தால் தப்பிய அயர்லாந்து

ENG-vs-IRE
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டி டாஸ் கூட போடப்படாமல் மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 344 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 286 ரன்கள் குவித்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று செப்டம்பர் 26-ஆம் தேதி பிரிஸ்டல் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது அயர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை பாவம் பார்க்காமல் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து 31 ஓவர்களிலேயே நான்கு விக்கெடுகளை இழந்து 280 ரன்கள் குவித்து அதிரடி காட்டியிருந்த வேளையில் மழை காரணமாக போட்டி தடைபட்டது.

- Advertisement -

அதன்பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பாக இன்றைய போட்டியில் களமிறங்கிய அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வந்தனர். ஒருவேளை இன்றைய போட்டியில் முழுவதும் 50 ஓவர்கள் நடந்திருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி 450 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும்.

இதையும் படிங்க : அது முடிஞ்சு போன கதை.. 2023 உ.கோ தொடரில்.. சிங்கிள் ரன் எடுக்கலைனா கூட நான் கவலைப்பட மாட்டேன்.. ரோஹித் ஓப்பன்டாக்

அப்படி குவித்திருந்தால் நிச்சயம் அயர்லாந்து அணியானது மாபெரும் ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கும். நல்ல வேளையாக மழை வந்து தற்போது அயர்லாந்து அணியை காப்பாற்றியுள்ளது என்றே கூறலாம். ஆனாலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement