என்ன மனசுயா இந்த மனுஷனுக்கு. பாக் ரசிகருக்காக தடுப்பு வேலி மீது ஏறிய மெக்கல்லம் – என்ன நடந்தது?

Brendon-Mccullum
- Advertisement -

பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியானது கராச்சி மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அவர்களை வாஷ்அவுட் செய்து அசத்தியது.

இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணி இங்கிலாந்து அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்த வேளையில் டி20 கிரிக்கெட் போட்டியை போன்று 28 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து வீரர்கள் துவம்சம் செய்து அமர்க்களமான வெற்றியை பதிவு செய்தனர்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணியிலான இங்கிலாந்து அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கூட அதிரடியாக இவர்கள் விளையாடும் அணுகுமுறைக்கு பேஸ்பால் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மட்டையை போடாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் ரசிகர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாக் ரசிகர்களுக்கு அவர் ஆட்டோகிராப் வழங்கினார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் தனது கையில் இருந்த டீ ஷர்ட்டை பிரண்டன் மெக்கல்லத்திடம் தூக்கி வீசி ஆட்டோகிராப் கேட்டார்.

- Advertisement -

பின்னர் சற்றும் யோசிக்காமல் அந்த டி-ஷர்டில் தனது கையெழுத்தினை இட்டு மீண்டும் அந்த ரசிகரிடம் மெக்கல்லம் தூக்கி எறிந்தார். ஆனால் அந்த டீ-ஷர்ட் எதிர்பாராத விதமாக தடுப்பு வேலியின் மீது சிக்கிக்கொண்டது. இதனால் அந்த ரசிகர் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த வேளையில் சற்றும் அலட்டிக்காமல் மெக்கல்லம் செய்த செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு திரும்புவது பற்றி முதன்முறையாக வாய் திறந்த தமிழக வீரர் – நடராஜன் அதிரடி கருத்து

அந்த வகையில் தடுப்பு வேலியின் மீது சிக்கிய அந்த டி-ஷர்டை எடுக்க தாமே முன்வந்து கிடு கிடுவென அந்த தடுப்பு வேலையின் மீது ஏறி சிக்கி இருந்த அந்த டீ-சர்டை எடுத்து ரசிகரிடம் கொடுத்தார். அவரது இந்த எளிமையான குணமும், இயல்பான செயலும் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement