இந்திய அணிக்கு திரும்புவது பற்றி முதன்முறையாக வாய் திறந்த தமிழக வீரர் – நடராஜன் அதிரடி கருத்து

Nattu
- Advertisement -

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சை டி.என்.பி.எல் தொடரில் வெளிப்படுத்தியதால் அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. பஞ்சாப் அணியில் அவர் வாய்ப்பினை பெற்றாலும் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடினார். இருப்பினும் அதனை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அவருக்கு 2020-ஆம் ஆண்டில் ஒரு முழு சீசனில் விளையாடும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நடராஜன் தனது சிறப்பான யார்க்கர் பந்துவீச்சின் மூலம் உலகில் முன்னணி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

Nattu-2

- Advertisement -

அவரது இந்த அபார திறமையை கண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் கூடுதல் நெட் பவுலராக அணியில் சேர்த்தது. அப்படி அவர் ஆஸ்திரேலியா பயணித்த வேளையில் அதிர்ஷ்டவசமாக முன்னணி வீரர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டு அந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு நடராஜனை தேடிச் சென்றது. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமான நடராஜன் இதுவரை இந்திய அணிக்காக நான்கு டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டைகளையும், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அந்த ஆஸ்திரேலிய தொடர் நடராஜனுக்கு சிறப்பாக அமையவே இனி வருங்காலத்தில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதனை தொடர்ந்து தொடர் காயம் ஏற்படவே அவரால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய முடியவில்லை.

Nattu

அதேபோன்று கடந்த ஐ.பி.எல் சீசனிலும் காயம் காரணமாக பாதி போட்டிகளை தவறவிட்டதால் நடராஜன் இதுவரை இந்திய அணிக்காக திரும்பாமல் உள்ளார். இந்நிலையில் மீண்டும் தான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து சமீபத்தில் தமிழக வீரர் நடராஜன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது :

- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது நான் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறேன். நிச்சயம் அந்த தொடரில் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை மீண்டும் வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பினை பெறுவேன் என்று நம்பிக்கையாக பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : உன் மூக்கு உடைஞ்சுடுச்சு – 16 வயதில் பாக் வீரர்களிடம் எதிர்கொண்ட ஸ்லெட்ஜிங் பற்றி மனம் திறந்த சச்சின்

காயத்திலிருந்து தற்போது தான் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் தொடர்ச்சியான பயிற்சிகளை எடுத்து வருவதால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் ஜெர்சியை எப்படியாவது அணிவேன் என்று உறுதி அளித்துள்ளார். எளிமையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்த நடராஜன் மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement