இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக என்ன என்ன தகுதி வேண்டும் தெரியுமா ? – விவரம் இதோ

Ravi
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Ravi-Shastri

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு . இந்நிலையில் தற்போது பயிற்சியாளர் ஆவதற்கான தகுதிகள் குறித்த வரைமுறை வெளியாகி உள்ளது. அதன் விவரம் இதோ :

* இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அணியில் ஆடி இருக்க வேண்டும்.

* தலைமை பயிற்சியாளராக ஐபிஎல் அல்லது முதல்தர இந்திய அணி அல்லது இந்திய ஏ அணி ஆகியவற்றில் ஏதாவது ஒரு அணியில் மூன்று ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

* ஏதாவது ஒரு அணி சார்பாக பிசிசிஐ நடத்தும் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

* 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Ravi

வெளிநாட்டு வீரர்கள் பயிற்சியாளராக ஆசைப்பட்டாலும் இந்த விதி பொருந்த வேண்டும். மேல குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பிசிசிஐ நிர்வாகம் பயிற்சியாளருக்கான தகுதிகளாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement